பீகார் சட்டமன்ற தேர்தலில் 8 பாஜக வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகளில் ‘விநோத’ ஒற்றுமை இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
பாஜகவின் சாம்ராட் சவுத்ரி Tarapur தொகுதியில் 1,22,480; நிராஜ்குமார் சிங் சிங் Chhatapur தொகுதியில் 1,22,491; கிருஷ்ணகுமார் ரிஷி BanMankhi தொகுதியில் 1,22,494;
விஜயகுமார் சின்ஹா LakhiSarai தொகுதியில் 1,22,408 வாக்குகளைப் பெற்றிருந்தது எப்படி சாத்தியம் என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

காங்கிரஸ் பகீர் புகார்
தற்போது, மேலும் 8 பாஜக எம்.எல்.ஏக்கள் பெற்ற வாக்குகள் விவரத்தை வெளியிட்டு, இதில் உள்ள விநோத ஒற்றுமைகளை பட்டியலிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.
பாஜகவின்
சஞ்சய் குமார் பாண்டே 1,00,044
தர்கிஷோர் பிரசாத் 1,00,255
சுரேந்திர மேஹ்தா 1,00,343
ரஞ்சன்குமார் 1,00,477
சஞ்சய் குமார் 1,00,485
ருஹைல் ரஞ்சன் 1,00,487
ஜிபேஷ்குமார் 1,00,496
ரோஹித் பாண்டே 1,00,770 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
மேலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திர மோசடிக்கு இதுவே ஆதாரம் என்றும் காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
