பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் 4 வேட்பாளர்கள் ஒரே மாதிரியாக 1,24,000+ வாக்குகள் வாங்கி இருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-ஜேடியூ மிகப் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. பீகார் முதல்வராக 10-வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்க உள்ளார்.
பீகாரில் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி மிகப் பெரும் தோல்வியைத் தழுவி இருக்கிறது. இது அந்த கட்சிகளின் தொண்டர்களை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.




இந்த நிலையில் பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதில் பாஜகவின் 4 வேட்பாளர்கள் வெவ்வேறு தொகுதிகளில் 1,22,400+ வாக்குகளை ஒரே மாதிரியாக பெற்றுள்ளது விவாதத்துக்குரியதாகி இருக்கிறது.
பாஜகவின்
சாம்ராட் சவுத்ரி Tarapur தொகுதியில் 1,22,480
நிராஜ்குமார் சிங் சிங் Chhatapur தொகுதியில் 1,22,491
கிருஷ்ணகுமார் ரிஷி BanMankhi தொகுதியில் 1,22,494
விஜயகுமார் சின்ஹா LakhiSarai தொகுதியில் 1,22,408 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
பீகார் தேர்தலில் 4 தொகுதிகளில் பாஜகவின் வேட்பாளர்கள் 1,22,400+ வாக்குகளைப் பெற்றதில் முறைகேடு உள்ளதா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
