ADVERTISEMENT

பீகார்: சொல்லி அடிக்கும் ராகுல்- பரிதாப பாஜக கூட்டணி- Lok Poll வெளியிட்ட ‘பரபர’ சர்வே முடிவுகள் என்ன?

Published On:

| By Mathi

Bihar Election Survey

பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்கிறது Lok Poll கருத்து கணிப்பு.

பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ)- பாஜக கூட்டணிக்கும் காங்கிரஸ்- ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ADVERTISEMENT

பீகாரில் மொத்தம் 243 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 122 இடங்கள்.

பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக Lok Poll நிறுவனம் தமது கருத்து கணிப்பு முடிவுகளை இன்று (செப்டம்பர் 26) வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

முடிவுகள் விவரம்:

காங்கிரஸ்- ஆர்ஜேடி: 118 முதல் 126 இடங்களைக் கைப்பற்றும்

ADVERTISEMENT

இந்த கூட்டணிக்கு 39% முதல் 42% வாக்குகள் கிடைக்கும்.

பாஜக- ஜேடியூ கூட்டணிக்கு 105 முதல் 114 இடங்கள் கிடைக்கும்.

இந்த கூட்டணிக்கு 38% முதல் 41% வாக்குகள் கிடைக்கும்.

இதர கட்சிகளுக்கு 2 முதல் 5 இடங்கள் கிடைக்கும். இதர கட்சிகளுக்கு 5% முதல் 12% வாக்குகள் கிடைக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share