பிக் பாஸ்; அடேயப்பா.. சான்ட்ரா இவ்வளவு ஆபத்தானவரா?

Published On:

| By Minnambalam Desk

‘நான் நல்லா இல்லாவிட்டால் என்னை சுத்தி எவனுமே நல்லா இருக்கக் கூடாது’ என்று நினைப்பவர்கள் உண்டு. என்னை சுற்றி உள்ளவர்கள் மட்டுமல்ல; கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் இருக்கிற எவருமே நல்லா இருக்கக் கூடாது; இந்த உலகமே நல்லா இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் கூட உண்டு.

அவர்கள் ஆணாக இருக்கலாம்; பெண்ணாக இருக்கலாம்; படித்தவர்- படிக்காதவராக இருக்கலாம். அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு பிக்பாஸில் விஷ பாட்டிலாக வளைய வரும் சான்டரா வாகக் கூட இருக்கலாம்.

ADVERTISEMENT

பிக்பாஸ் வீட்டில் அவர் நினைத்தது நடக்கவில்லை. அதனால் ‘யாரும் நிம்மதியாக இருக்கக் கூடாது. தன் காதில் விழும்படி பேசவோ சிரிக்கவோ கூடாது’ என்பது அவர் எண்ணம்.

அது மட்டுமல்ல… தனக்கு பிடிக்காதவர்கள், தனக்கு ஒத்து ஊதாதவர்கள் நிம்மதியாக இருந்தால் பிடிக்கவில்லை அவருக்கு.

ADVERTISEMENT

அவர்கள் சொல்லாத விஷயங்களை அவர்கள் சொன்னதாக கூறி, வீண் பழி சுமத்தி அவர்கள் பதறித் துடிப்பதை பார்த்தது ரசிப்பதில் அவருக்கு ஒரு ரத்தம் குடிக்கும் சுகம் இருப்பது தெரிகிறது.

உண்மையில் சுவையாகவும் காமெடியாகவும் போன டாஸ்க் டான்ஸ் மாரத்தான்.

ADVERTISEMENT

போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் அதை சந்தோஷமாக பார்த்து ரசிப்பது சான்ட்ராவுக்கு பொறுக்கவில்லை. பின்னே? அவர் சோகத்தில் இருக்கும்போது, காசு கொடுத்து பிக்பாஸ் பார்க்கும் ரசிக்கும் மட்டும் சந்தோஷமாக இருக்கலாமா?

நிகழ்சசியில் கனி திரு, பாப்பா பாடும் பாட்டு என்று ஒரு பாட்டை பாட, உடனே சான்ட்ரா ”நான் என் பிள்ளைகளை பிரிந்து இருக்கிறேன். என்னையும் என் பிள்ளைகளை கேவலப்படுத்துகிறாயா?” என்று பொய்க் கண்ணீரும் வஞ்சகக் கோபமுமாய் வேஷம் கட்டி ஆடினார்.

உண்மையாகவே பதறித் துடித்த கனி. ” நான் அப்படி சொல்வேனா? எனக்கும் இரண்டு பிள்ளைகள் உண்டு. என் பிள்ளைகள் மேல் சத்தியமாக அப்படி நினைத்துப் பாடவில்லை.”என்று உடைந்து போக, அவரது வேதனையை ரத்தக் காட்டேரி போல உள்ளுக்குள் நாக்கை சுழற்றி மானசீகமாக ரசித்துக் குடித்தபடி, சற்றும் பதட்டம் இல்லாமல் மென்மையாக – வன்மத்தோடு – மீண்டும் மீண்டும், ” நீங்க என் குழந்தையை தப்பா சொன்னீங்க’ என்று வஞ்சகத்தின் உச்சமாக சொல்லிக் கொண்டே இருந்தார் சான்ட்ரா.
.
விஜய் சேதுபதி வந்து சான்ட்ராவிடம், ”கனி திரு தப்பா சொல்லல” என்று சொல்லியும் “எனக்கு அப்படித்தான் இருந்தது என்று வீம்பிலேயே இருந்தார் சான்டரா.

விஜய் சேதுபதி சான்ட்ராவின் காலில் விழாத குறையாகக் கெஞ்சி, கனி திருவிடம் சான்டராவை ஒரு சாரி சொல்ல வைப்பதற்குள் விஜய் சேதுபதிக்கு நாக்குத் தள்ளி விட்டது.

இத்தனைக்கும் சான்ட்ரா, கொஞ்சம் கூட பதட்டம் இன்றி சம்மந்தா சம்மந்தம் இல்லாமல், கூலாக நிதானமாக குற்றச்சாட்டு வைக்கும் விதத்திலேயே, எல்லோருக்கும் இயல்பாக புரியும், கனி அப்படி எதுவும் தவறாக பாடவில்லை என்பது சான்டரா வுக்கே தெரியும்’ என்பது.

ஆனால் விஜய் சேதுபதிக்கு மட்டும் அது புரியவில்லை.

“அப்போ அப்படி தோணுச்சு. அதான் சொன்னேன்.. இப்ப நீங்க சொன்னதால கனி என் குழந்தைகளைப் பற்றி தப்பா பேசலைன்னு புரியுது சார்” என்று சான்டரா சொன்னவுடன், ஒரு சாரியை கஷ்டப்பட்டு வாங்கி கனிக்கு அனுப்பி விட்டு திருப்தி அடைந்தார் விஜய் சேதுபதி.

”இல்ல சான்ட்ரா. அவங்க தப்பா ஒண்ணும் சொல்லலைன்னு உங்களுக்கே தெரியும். நீங்க வேணும்னு அவங்க மேல வீண் பழி சுமத்தி அசிங்கமா நடந்துக்கிட்டீங்க? என்று விஜய் சேதுபதி சொல்லி இருக்க வேண்டும்.

அதுதான் உண்மை மற்றும் நியாயம். அதுக்குதான் விஜய் சேதுபதி,

பொதுவாக, அந்தக் கால சினிமாக்களில் காதலனும் காதலியும் முத்தம் கொடுக்க நெருங்கும்போது, இரண்டு பூக்கள் மோதிக் கொள்ளும் காட்சியை காட்டுவார்கள் அல்லவா?

அதே போல கமருதீனும் பார்வதியும் நெருங்கி உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டு, மேலும் முகமும் முகமும் நெருங்க…

கட் பண்ணி ஒரு பூச்செடியை காட்டினார் பிக் பாஸ். (இன்னும் நிறைய பூ காட்டுவீங்களா? இல்லை ஒரு பூந்தோட்டமே காட்டுவீங்களா பிக்பாஸ்?)

ஆதிரையின் எவிக்ஷன் நெகிழ்ச்சியைக் கொடுத்தது.

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share