விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ன் இறுதிப் போட்டியில் நடிகை திவ்யா கணேஷ் டிராபியை வென்றுள்ளார். அவருக்கு ரூ50 லட்சம் மற்றும் புதிய கார் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 9, கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கியது. 2-வது முறையாக நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பல்வேறு சர்ச்சைகளுடன் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 9-ல் இறுதிப் போட்டி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த நடிகை திவ்யா கணேஷ், வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு பரிசுத் தொகையாக ரூ.50 லட்சம் மற்றும் புதிய கார் ஆகியவை வழங்கப்பட்டன. 2-வது இடத்துக்கு நடிகர் சபரிநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
