ஒன்றிய பாஜக அரசின் ஓரவஞ்சனைகள்.. பட்டியல் வெளியிட்ட ஸ்டாலின்!

Published On:

| By Mathi

MK Stalin List

தமிழ்நாடு அரசின் சாதனைகளையும் மத்திய அரசின் ஓரவஞ்சனைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளார்.

இடைக்கால பட்ஜெட் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளதாவது: “இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

ADVERTISEMENT

ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம்!

ஜூலை மாதம் DravidianModel 2.0-வில் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம்!

ADVERTISEMENT

நமது DravidianModel அரசின் சாதனைகளில் சிலவற்றையும் – ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துவரும் ஓரவஞ்சனைகளில் சிலவற்றையும் உங்களின் பார்வைக்குப் பகிர்கிறேன்…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share