பாரதிராஜா மகன் மனோஜ் மறைவு!

Published On:

| By Kavi

பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் இன்று (மார்ச் 25) காலமானார். Bharathiraja son Manoj passes away

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘தாஜ்மஹால்’ படம் மூலம் நடிகராக திரைத்துறைக்கு அறிமுகமானார்.  இந்த படத்தை பாரதிராஜாவே இயக்கியிருந்தார். 

ADVERTISEMENT

அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார். 

கடைசியாக கார்த்தியின் ‘விருமன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மார்கழி திங்கள் உள்ளிட்ட படங்களையும் இயக்கியிருக்கிறார். 

ADVERTISEMENT

இந்தநிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இன்று மாலை 6 மணியளவில் மனோஜ் பாரதிராஜா அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 48.

அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Bharathiraja son Manoj passes away

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share