இந்துத்துவா தலைவர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் மோகன் பகவத் பேசுகையில், ”சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கினால் அந்த விருதுக்கே பெருமை. ஜாதிய பாகுபாடு நீங்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும்.
75 வயதைக் கடந்த நிலையிலும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பதவியில் நீடிக்கிறேன். எங்கள் அமைப்பு கேட்டால் பதவியை விட்டு விலக தயாராக இருக்கிறேன்” என கூறியிருந்தார்.
மோகன் பகவத்தின் இந்த கோரிக்கைக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தின் போது அப்போராட்டத்தைக் காட்டி கொடுத்தவர் சாவர்க்கர் என்பதால் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க கூடாது என்கிறது காங்கிரஸ்.
