விஜய் தொலைக்காட்சியில் இறுதி கட்டத்தில் உள்ள பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ், சக நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் 2020ஆம் ஆண்டு தொடங்கி ஆறு ஆண்டுகளாக ஒளிபரப்பான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நடிகர்கள் சதீஷ், ராமமூர்த்தி, நடிகைகள் சுசித்ரா, திவ்யா, ரேஷ்மா, ராஜலட்சுமி, ரஞ்சித், நேஹா மேனன் என பலரும் நடித்துள்ளனர்.

இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்த சதஷின் நடிப்புக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

வரும் வெள்ளிக்கிழமையுடன் சீரியல் முடிவடைகிறது. இறுதியாக இனியா -ஆகாஷ் திருமணத்துடன் சீரியலுக்கு எண்டு கார்டு போட்டுள்ளார் இயக்குநர்.

இந்தசூழலில் சீரியலில் 6 ஆண்டுகாலம் பயணித்த நினைவுகளை நினைவுகூர்ந்து தினமும், ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார் கோபி.

பாக்யலட்சுமி சீரியலில் இருந்து இடையில் விலகிய நடிகர் விஷாலுடன் (எழில்) எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, “அவனும் நானும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுபோன்று, இனியா, மயூ, ராதிகா பாக்கியலட்சுமி, ராமமூர்த்தி ஈஸ்வரி ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படைத்தையும் பகிர்ந்துள்ளார்.

சுமார் 6 ஆண்டு பயணம் நிறைவடைவதையொட்டி, இத்தொடரில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களும், நடிக்கும்போது கிடைத்த அனுபவங்களையும், சக நடிகர்களுடான நட்பினையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தபுகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.