உழவர்கள் இயற்கைக்கு நன்றி செலுத்தும் பண்டிகை பொங்கல்.
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கையுடன், அறுவடைத் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த பண்டிகையின் முக்கிய நாளான இன்று (தை 1) புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசி, பால், வெல்லம் சேர்த்துப் பொங்கல் சமைத்து, சூரிய பகவானுக்குப் படைத்து மக்கள் நன்றி செலுத்துவார்கள்.
வீடுகள் தோறும் வண்ணக் கோலங்கள் இடப்பட்டு, மஞ்சள் கொத்து மற்றும் கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டு, குடும்பத்தினருடன் இணைந்து மக்கள் பொங்கலிடுவார்கள்.
அப்படி பொங்கல் வைப்பதற்கும், சூரிய பகவானை வழிபடுவதற்கும் சில குறிப்பிட்ட நேரங்கள் மிகவும் உகந்ததாகப் பார்க்கப்படுகிறது.
சூரியன் உதயமாவதற்கு முன் பொங்கல் வைக்க விரும்புவோர் பிரம்ம முகூர்த்தத்தில் காலை 4:30 மணி முதல் 6 மணி வரை வைக்கலாம். அதன்பிறகு படையலிட்டு சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தலாம்.
காலை 6 மணிக்கு மேல் பொங்கல் வைக்க விரும்புவோர்
காலை 7. 45 மணி முதல் 8. 45 மணி வரை
காலை 10.35 முதல் பகல் 1 மணி வரை பொங்கல் வைத்து வழிபடலாம்.
மாட்டுப் பொங்கல்
நாளை (தை 2) மாட்டு பொங்கல் அன்று முன்னோர்களுக்கு படையல் இடுவது வழக்கம். காலை 9.10 மணி முதல் 10.20 மணி வரை அல்லது 12 மணி முதல் 1.30 மணி வரை படையல் போடலாம்.
சிலருக்கு மாலை 6 மணிக்கு மேல் படையல் போடும் வழக்கம் இருக்கும். அவர்கள் நேரம் குறித்து கணக்கிட்டுக் கொள்ள வேண்டாம்.
உங்கள் இல்லத்தில் இன்பமும், உழைப்பில் உயர்வும், உறவுகளில் ஒற்றுமையும், ஆரோக்கியமும் பொங்கி பெருகட்டும்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
