தினமும் காலை வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை (Lemon Water) சேர்த்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்துப் பார்க்கலாம்.
நமது மோசமான வாழ்க்கை முறை, உடற்பயிற்சி இல்லாதது, உணவுப் பழக்கம் காரணமாக உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சனைகளை நாம் சந்திக்கிறோம். இதிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை தொடங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கலாம். அதற்கெல்லாம் முதல் படியாக காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர் அருந்தலாம். இது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது.
எலுமிச்சையின் நன்மைகள்:
எலுமிச்சையில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (Antioxidants), பொட்டாசியம் மற்றும் சிட்ரிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர் (Benefits of lemon water) அருந்துவது, அன்றைய நாளுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதோடு, நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. பருவ மாற்றங்களின் போது ஏற்படும் சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன.
கல்லீரலை பாதுகாக்கும் எலுமிச்சை:
எலுமிச்சை தண்ணீர் அருந்துவது உடலை இயற்கையாகவே நச்சு நீக்கம் செய்து, நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. காலையில் எலுமிச்சை நீர் அருந்துவது உடலைச் சுத்தப்படுத்துவதோடு, கல்லீரல் (liver function) செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.
எடை மேலாண்மைக்கு உதவுகிறது:
பலரும் உடல் எடையைக் குறைப்பதற்காக காலையில் எலுமிச்சை நீர் அருந்துகின்றனர். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை நீரைக் (lemon for weight loss) கலந்து அருந்துவது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் கலோரிகளை மிகவும் திறம்பட எரிக்க உதவுகிறது. எனவே, காலையில் எலுமிச்சை நீர் அருந்துவது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவக்கூடும்.
சருமத்திற்கு சூப்பர் நன்மைகள்:
எலுமிச்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களும் வைட்டமின் சியும் சருமத்திற்கு மிகவும் நன்மை அளிக்கின்றன. எலுமிச்சை நீரைத் தவறாமல் அருந்துவது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தைத் (skin care tips) தெளிவாகவும் பொலிவுடனும் வைத்திருக்க உதவுகிறது. மேலும், இது கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து, ஆரோக்கியமான மற்றும் புத்துணர்ச்சியான தோற்றத்தை அளிக்கிறது.
எலுமிச்சை நீர் தயாரிப்பது எப்படி?:
காலையில் எலுமிச்சை நீர் அருந்துவது உடலுக்கு உடனடி நீரேற்றத்தை அளிக்கிறது. இது உடலைப் புத்துணர்ச்சியடையச் செய்து, அன்றைய நாளை நேர்மறையாகத் தொடங்க உதவுகிறது. காலையில் எழுந்தவுடன், ஒரு குவளை வெதுவெதுப்பான நீரை (how to make lemon water) எடுத்து, அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, விரும்பினால் சிறிதளவு தேன் சேர்த்து, மெதுவாகப் பருகவும். இது உடலுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்கும்.
