முடி வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் நெல்லிக்காய் (Amla) மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
தற்போதைய காலகட்டத்தில் சிறு வயதிலேயே பலருக்கும் முடி நரைப்பது பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. முன்பெல்லாம் நரை முடி என்பது முதுமையின் அறிகுறியாக கருதப்படுகிறது. ஆனால், இப்போது மோசமான உணவுப் பழக்கம், மன அழுத்தம், மோசமான சூழல் காரணமாக இளைஞர்களுக்கே நரை முடி வர ஆரம்பித்துவிட்டது.
நரை முடி என்பது நமது தோற்றத்தை மாற்றுவதோடு மட்டுமின்றி நமது தன்னம்பிக்கையையும் உடைக்கிறது. சந்தையில் கிடைக்கும் பொருட்கள் முடியை வெளியில் இருந்து மட்டுமே கருப்பாக்குகின்றன. ஆனால், உள்ளே வேர்களுக்கு பிரச்சனை உண்டாக்கி முடி உதிர்வை ஏற்படுத்துகின்றன.
ஆனால், நெல்லிக்காய் முடியின் இயற்கையான நிறத்தை மீட்டெடுத்து அவை ஆரோக்கியமாக வளர உதவி புரிகின்றன.
நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள் (Nutrients in amla) : நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆக்சிஜனேற்றிகள், இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இவை உச்சந்தலைக்கு ஊட்டமளித்து முடியின் வேர்களை வலுப்படுத்திகின்றன. உலர்ந்த நெல்லிக்காய் முடியின் இயற்கையான நிறத்தை பாதுகாத்து முன்கூட்டியே நரை வருவதை தடுக்கிறது. உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. முடி உதிர்வைத் தடுப்பதோடு, முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.
நெல்லிக்காய் நீரை பயன்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம் (amla for hair growth) : ஒரு கைப்பிடி அளவு உலந்த நெல்லிக்காயை எடுத்து தண்ணீரில் இட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் அடர் பழுப்பு நிறமாக மாறும்போது, அடுப்பை அணைத்து ஆற விட வேண்டும். தண்ணீரை வடிகட்டிய பிறகு முடியை அலசலாம். இவ்வாறு வாரத்தில் 2 – 3 வாரங்கள் செய்வதன் மூலம் தலைமுடி பளபளப்பாகவும், மென்மையாகவும் மாறுவதை கவனிக்கலாம்.
நெல்லிக்காய் பொடி எண்ணெய் ( amla oil) : உங்கள் தலைமுடியை வேர்களில் இருந்து வலுப்படுத்த வேண்டும் என்றால் நெல்லிக்காய் எண்ணெய் சிறந்தது. உலர்ந்த நெல்லிக்காயை ஒரு பொடியாக அரைக்க வேண்டும். இந்த பொடியை தேங்காய் அல்லது கடுகு எண்ணெயுடன் சிறிது சூடாக்க வேண்டும். எண்ணெய் ஆறியதும் உச்சந்தலையில் அதனை தேய்த்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இது முடியை உட்புறத்தில் இருந்து ஈரப்பதமாக்குகிறது. தொடர்ந்து இப்படி மசாஜ் செய்வதன் மூலம் முடி உடைவதை தடுக்க முடியும். முடி பளபளப்பையும் அதிகரிக்கும்.
நெல்லிக்காய் சாப்பிடுவதும் நன்மையளிக்கும் (Benefits of eating amla) : நெல்லிக்காய் நன்மைகளை அதனை வெளிப்புறத்தில் பயன்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. நெல்லியை உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நெல்லிக்காயை சாப்பிடுவது ரத்தத்தை சுத்திகரிக்கும். இது முடி வளர்ச்சி, சருமத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அதே சமயம் நெல்லிக்காய் சாப்பிடுவதுடன் நன்றாக உறங்க வேண்டும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். இப்படியாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும், கருமையாகவும் வைத்திருக்கலாம்.
