ADVERTISEMENT

BeL-ல் வேலை… சென்னையில் நேர்காணல்! 99 காலிப்பணியிடங்கள்… இன்ஜினியரிங், ஐடிஐ முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்!

Published On:

| By Santhosh Raj Saravanan

bel chennai recruitment 2026 walk in 99 apprentice vacancies

“என்னப்பா… இன்ஜினியரிங் முடிச்சுட்டு இன்னும் வேலை தேடிட்டு இருக்கியா? அதுவும் நம்ம சென்னையிலேயே ஒரு மத்திய அரசு நிறுவனத்துல வேலை கிடைச்சா எவ்ளோ கெத்தா இருக்கும்?” – இப்படி யோசிக்கிறவங்களுக்கு தான் இந்த ஹாட் அப்டேட்.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL), தனது சென்னை நந்தம்பாக்கம் கிளைக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 99 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் ஹைலைட் என்னவென்றால், இது ஒரு ‘டைரக்ட் வாக்-இன்’ (Direct Walk-in). அதாவது, ஆன்லைனில் அப்ளை பண்ணிட்டு ரிசல்ட்டுக்காக மாசக்கணக்குல வெயிட் பண்ண தேவையில்லை. நேரா போறோம், இன்டர்வியூ அட்டென்ட் பண்றோம், வேலையைத் தட்டுறோம்!

ADVERTISEMENT

யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்? (Eligibility Breakdown)

இந்த 99 பணியிடங்கள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பி.இ முதல் ஐடிஐ வரை படித்தவர்களுக்கு வாய்ப்பு உண்டு:

  • கிராஜுவேட் அப்ரண்டிஸ் (64 இடங்கள்): பி.இ அல்லது பி.டெக் படிப்பில் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், இ.இ.இ, சி.எஸ்.இ அல்லது சிவில் முடித்திருக்க வேண்டும்.
  • டெக்னீஷியன் டிப்ளமோ அப்ரண்டிஸ் (20 இடங்கள்): மெக்கானிக்கல் மற்றும் இ.சி.இ பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் இதற்குப் போட்டி போடலாம்.
  • ஆப்ஷனல் அப்ரண்டிஸ் (10 இடங்கள்): இது இன்ஜினியரிங் அல்லாதவர்களுக்கானது. பி.காம், பிபிஏ அல்லது பிபிஎம் முடித்த பட்டதாரிகள் இதற்குத் தகுதியானவர்கள்.
  • ஐடிஐ அப்ரண்டிஸ் (15 இடங்கள்): பிட்டர், எலக்ட்ரிஷியன், எலக்ட்ரானிக் மெக்கானிக் பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு மற்றும் நிபந்தனைகள்:

ADVERTISEMENT
  • வயது 01.01.2026 அன்று கணக்கிடப்படும். பி.இ மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு அதிகபட்சம் 25 வயது, ஐடிஐ முடித்தவர்களுக்கு 21 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • வழக்கம் போல எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.
  • முக்கியமான விஷயம் பாஸ், நீங்கள் 01.04.2021-க்கு பிறகு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதற்கு முன் முடித்தவர்களுக்கு இதில் இடமில்லை.

நேர்காணல் எப்போ? (Interview Schedule Details)

நேர்காணல் நடைபெறும் இடம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், நந்தம்பாக்கம், சென்னை – 600089.

அனைத்து நேர்காணல்களும் காலை 09:30 மணிக்கு தொடங்கும். உங்கள் துறைக்கான தேதியை மட்டும் சரியாகக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்:

ADVERTISEMENT
  • பிப்ரவரி 5, 2026 அன்று: டிப்ளமோ (ECE, MECH), ஐடிஐ (அனைத்து துறைகள்) மற்றும் பி.காம், பிபிஏ, பிபிஎம் முடித்தவர்கள் கலந்துகொள்ள வேண்டும்.
  • பிப்ரவரி 6, 2026 அன்று: பி.இ அல்லது பி.டெக் படிப்பில் மெக்கானிக்கல் மற்றும் சிவில் முடித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெறும்.
  • பிப்ரவரி 7, 2026 அன்று: பி.இ அல்லது பி.டெக் படிப்பில் இ.சி.இ, இ.இ.இ மற்றும் சி.எஸ்.இ முடித்தவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.

இதை மறந்துடாதீங்க:

  • முன் பதிவு கட்டாயம்: வாக்-இன் போறதுக்கு முன்னாடி, நீங்க NATS (National Apprenticeship Training Scheme) அல்லது NAPS போர்ட்டல்ல பதிவு செஞ்சிருக்கணும். அந்த ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் இல்லாம உள்ள விடமாட்டாங்க பாஸ்!
  • டாக்குமெண்ட்ஸ் ரெடியா?: உங்களுடைய ஒரிஜினல் சர்டிபிகேட்ஸ், ஒரு செட் ஜெராக்ஸ் மற்றும் ஆதார் கார்டு இதையெல்லாம் மறக்காம எடுத்துட்டு போங்க.
  • அனுபவம் பேசும்: இது ஒரு வருஷ ட்ரைனிங் தான் என்றாலும், பிஇஎல் போன்ற ஒரு பெரிய நிறுவனத்துல வேலை பார்த்த அந்த ‘எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட்’ இருக்குற மவுசே தனி. பின்னாடி பெரிய கம்பெனிகளுக்கு போகும்போது இது உங்களுக்கு ஒரு ‘கோல்டன் டிக்கெட்’டா இருக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி? விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 5 முதல் 7ஆம் தேதி வரை நடைபெறும் நேர்காணலில் நேரடியாகப் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு www.bel-india.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பாருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share