இந்த ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் வங்கி வேலைகள் செய்ய திட்டமிட்டிருந்தால், அதை ஜனவரி இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்திலேயே முடித்துவிடுங்கள். இல்லையென்றால் அடுத்த மாதம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். ஏனெனில், வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தம் ஒரு நாள் மட்டுமே என்றாலும், தொடர்ச்சியான விடுமுறைகள் காரணமாக மூன்று நாட்களுக்கு வங்கிப் பணிகள் பாதிக்கப்படும்.
மேலும், வேலைநிறுத்தத்திற்கு முன்பே மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் மொத்தம் நான்கு நாட்கள் வங்கிப் பணிகள் தடைபட வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வங்கி வேலைகளை முடிக்க சிரமப்படுவார்கள்.
United Forum of Bank Unions (UFBU) என்ற வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, ஐந்து நாள் வேலை வாரத்தை அமல்படுத்தக் கோரி ஜனவரி 27 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் நடந்தால் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் நான்கு நாட்களுக்கு கடுமையாகப் பாதிக்கப்படும்.
ஜனவரி 24 அன்று நான்காவது சனிக்கிழமை விடுமுறை, அதைத் தொடர்ந்து ஜனவரி 25 ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஜனவரி 26 திங்கட்கிழமை குடியரசு தினம் வருகிறது. இதனால், வேலைநிறுத்தத்திற்கு முன்பே மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஜனவரி 27 அன்று வேலைநிறுத்தம் நடந்தால் வங்கிப் பணிகள் நான்காவது நாளாக பாதிக்கப்படும்.
தற்போது, மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில், ஞாயிற்றுக்கிழமைகளுடன் சேர்த்து வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் UFBU ஆகியவை மார்ச் 2024 இல் நடந்த ஊதிய மறுசீரமைப்பு ஒப்பந்தத்தின் போது மீதமுள்ள இரண்டு சனிக்கிழமைகளையும் விடுமுறை நாட்களாக அறிவிக்க ஒப்புக்கொண்டன. மேலும், RBI, LIC, GIC போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே ஐந்து நாள் வேலை வாரத்தில் செயல்படுவதாகவும், அந்நிய செலாவணி சந்தை, நாணய சந்தைகள் மற்றும் பங்குச் சந்தைகள் சனிக்கிழமைகளில் மூடப்படுவதாகவும் கூறப்படுள்ளது.
அதோடு, மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களும் சனிக்கிழமைகளில் மூடப்படுகின்றன. எனவே, வங்கிகளில் ஐந்து நாள் வேலை வாரத்தை அமல்படுத்த எந்த காரணமும் இல்லை என்று வாதிடுகின்றனர். இதுபோன்ற சூழலில்தான் இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் வங்கி வேலைகளை ஜனவரி 27ஆம் தேதிக்கு முன்பே முடித்துக்கொள்வது நல்லது. ஏனெனில், இந்த வேலைநிறுத்தம் மற்றும் தொடர்ச்சியான விடுமுறைகள் காரணமாக வங்கிப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும். குறிப்பாக, ஜனவரி 24, 25, 26 ஆகிய தேதிகளில் விடுமுறை மற்றும் ஜனவரி 27 அன்று வேலைநிறுத்தம் என்பதால், நான்கு நாட்கள் வங்கிச் சேவைகள் கிடைக்காது.
