ADVERTISEMENT

“பல்சர் வெறியர்களுக்கு ஒரு மெகா அப்டேட்!” – 8 புதிய மாடல்கள்… பஜாஜ் நிறுவனத்தின் அதிரடி பிளான்!

Published On:

| By Santhosh Raj Saravanan

bajaj pulsar new lineup 8 new models under development 2026 launch tamil news

இந்தியாவில் “பைக்” என்றால் அது ஹீரோ ஸ்பிளெண்டர். ஆனால், “ஸ்போர்ட்ஸ் பைக்” என்றால் அது என்றைக்கும் பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar) தான். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இளைஞர்களின் கனவுத் தேவதையாக வலம் வரும் பல்சர், இப்போது தனது அடுத்த அவதாரத்திற்குத் தயாராகிவிட்டது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புகழ்பெற்ற பல்சர் வரிசையில், ஒன்றல்ல இரண்டல்ல… மொத்தம் 8 புதிய மாடல்களை (8 New Models) உருவாக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்தி பைக் பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

ADVERTISEMENT

என்ன நடக்கிறது பஜாஜ் தொழிற்சாலையில்? சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி, பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் பிராண்டைப் புதுப்பிக்க முடிவு செய்துள்ளது. தற்போது சந்தையில் இருக்கும் போட்டி மிகவும் கடுமையாகிவிட்டது. டிவிஎஸ் அப்பாச்சி (TVS Apache), ஹீரோ எக்ஸ்ட்ரீம் (Hero Xtreme) போன்ற பைக்குகள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் வருவதால், பஜாஜ் நிறுவனம் தனது ராஜபாட்டையைத் தக்கவைக்க இந்த மெகா திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

எதிர்பார்ப்புகள் என்ன? இந்த 8 புதிய மாடல்களில் எவையெல்லாம் இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஆட்டோமொபைல் நிபுணர்களின் கணிப்பு இதோ:

ADVERTISEMENT
  1. மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு: தற்போதுள்ள N-சீரிஸ் (N160, N250) மற்றும் NS-சீரிஸ் பைக்குகள் புதிய கிராபிக்ஸ் மற்றும் டிசைன் மாற்றங்களைப் பெறலாம்.
  2. தொழில்நுட்பம்: ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற நவீன வசதிகள் அனைத்து மாடல்களிலும் எதிர்பார்க்கப்படுகின்றன.
  3. பெரிய இன்ஜின்: பஜாஜ் நிறுவனம் சமீபத்திய ட்ரையம்ப் (Triumph) வெற்றியால் உற்சாகத்தில் உள்ளது. எனவே, பல்சர் வரிசையில் ஒரு பெரிய 400cc பைக் அல்லது அட்வென்ச்சர் ரக பைக் இடம்பெற வாய்ப்புள்ளது.

எப்போது வரும்? “ஆன் அன்வில்” (On Anvil) என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், இந்த பைக்குகள் தற்போது உருவாக்க நிலையின் இறுதி கட்டத்தில் உள்ளன என்று அர்த்தம். அநேகமாக இந்த 2026-ம் ஆண்டின் இறுதிக்குள் அல்லது பண்டிகைக் காலங்களில் இவை ஒவ்வொன்றாகச் சாலைக்கு வரலாம்.

சந்தையில் போட்டி: இந்த 8 மாடல்களும் 125cc முதல் 400cc வரையிலான அனைத்துப் பிரிவுகளையும் குறிவைக்கும் என்று தெரிகிறது. “டெஃபினெட்லி மேல்” (Definitely Male) என்று சொல்லி 90ஸ் கிட்ஸை கவர்ந்த பல்சர், இப்போது 2கே கிட்ஸையும் வளைத்துப் போடத் தயாராகிவிட்டது.

ADVERTISEMENT

பல்சர் வாங்க பிளான் வச்சிருக்கீங்களா? அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… பஜாஜ் பெரிய ட்ரீட் வச்சிருக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share