இந்தியாவில் நடைபெறும் மற்ற உலகப்பட விழாக்கள் போல இல்லை என்றாலும், சென்னை உலகப் பட விழாவும் தொடர்ந்து சுமார் கால் நூற்றாண்டாக நடந்து வருகிறது.
ஆரம்பத்தில் மிக சரியாக, சிறப்பாக நடந்து கொண்டிருந்த இந்தப் பட விழாவில். ஒரு நிலையில், சிலர் உள்ளே நுழைந்தனர். அதிமுக திமுக ஆட்சிக் காலங்களில் இதற்கு தமிழக அரசின் நிதி உதவி கிடைக்கவும் ஆரம்பித்தது.
எந்த உதவியும் கிடைக்காத காலத்தில் மிக சிறப்பாக நல்ல படங்களோடு நடந்து கொண்டிருந்த இந்தப் படவிழா, வர வர ரொம்ப மோசமாகி விட்டது.
எல்லா நாட்களும் எல்லா படங்களும் நல்ல படங்களாகத் திரையிடப்பட்ட காலம் போய், இப்போது ஒவ்வொரு வருட விழாவிலும் சில நல்ல படங்கள் இருப்பதே அதிசயம் என்று ஆனது.
எனினும் ‘என் புருஷனும் கச்சேரிக்குப் போறான்’ என்கிற மாதிரி, இந்தப் பட விழாவில் தேர்ந்தெடுக்கப்படும் படங்களுக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கத்தான் செய்கிறது, இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை போல !
நேற்று முடிந்த இந்த திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் படங்கள் மற்றும் கலைஞர்கள், சிறந்த உலகப் படங்கள் , எம் ஜி ஆர் பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் எடுத்த படங்களின் பட்டியல் இது.
பிடிச்சா ஜம்முனு ரசிங்க. பிடிக்கலைன்னா உம்முன்னு இருக்காதீங்க.
சிறந்த தமிழ்ப் படம்
பறந்து போ
இயக்குனர் – ராம் (விருது பெறுபவர்)
இரண்டாவது சிறந்த தமிழ்ப் படம்
டூரிஸ்ட் ஃபேமிலி
இயக்குனர் – அபிஷந்த் ஜீவிந்த் (விருது பெறுபவர்)
இரண்டாவது சிறந்த தமிழ்ப் படம்
டூரிஸ்ட் ஃபேமிலி
தயாரிப்பளர்கள் ; யுவராஜ் கணேசன். மகேஷ்ராஜ் பசிலியான்,
நாசரேத் பசிலியான் (விருது பெறுபவர்கள்)
நடுவர் சிறப்பு விருது
காளி வெங்கட் (மெட்ராஸ் மேட்னி)
சிறந்த நடிகர்
சசிகுமார் (டூரிஸ்ட் ஃபேமிலி )
சிறந்த நடிகை
லிஜோ மோல் ஜோஸ் (காதல் என்பது பொது உடமை)
சிறந்த ஒளிப்பதிவாளர்
பாண்டி குமார் (அலங்கு)
சிறந்த எடிட்டர்
நாகூரான் ராமச்சந்திரன் (மாயக் கூத்து)
சிறந்த ஒலிப்பதிவாளர்
அழகிய கூத்தன் (3BHK மற்றும் அலங்கு)
Best World Cinema Feature Film
The Tower of Strength
Director: Nikola I. Vukcevic
Best World Cinema Featue Film
The Tower of Strength
Producers : Nikola I. Vukcevic, Christopher Thoke & Milorad Radenovic
2nd Best World Cinema Featue Film
Creating a Man
Director: Murat Çeri
2nd Best World Cinema Featue Film
Creating a Man
Producer: Murat Çeri
World Cinema Featue Film
Special Jury Award
Riverstone
Director: Lalith Rathnayake
எம் ஜி ஆர் பிலிம் இன்ஸ்ட்டிடியூட் மாணவர்கள் படம்
கற்பி
இயக்குனர் ; அருண்மொழி வர்மன். (விருது பெறுபவர்)
தயாரிப்பு ; இன்ஸ்ட்டிட்யூட் முதல்வர் (விருது பெறுபவர்)
சிறப்பு சான்றிதழ் பெறுபவர்
ஷீலா ராஜ்குமார் (வேம்பு என்ற படத்துக்காக)
இந்த வருஷ தமிழ்ப் பட விருதுகள் லிஸ்ட் பரவால்ல
— ராஜ திருமகன்
