உலகளவில் அதிக வசூல் செய்த படங்களில் முதலிடத்தில் இருப்பது 2009ஆம் ஆண்டு வெளியான தி அவதார் திரைப்படம். ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக அறியப்படும் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய இந்த படம் தான் கடந்த 16 ஆண்டுகளாக பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் உள்ளது. avatar 3 trailer update released today
அதனைத்தொடர்ந்து கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படமும் அதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் 3வது இடத்தில் உள்ளது. காலத்தால் என்றும் அழியாத காவியமான டைட்டானிக் நான்காவது இடத்தில் உள்ளது. இதன்மூலம் திரைக்கதையாகவும், வசூல் ரீதியாகவும் உலகளவில் உற்றுநோக்கப்படும் இயக்குநராக கேம்ஸ் கேமரூன் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அவதார் திரைப்படத்தின் மூன்றாவது பாகமான ‘அவதார் : ஃபயர் அண்ட் அஷ்’ படத்தின் அப்டேட் இன்று வெளியாகி இருக்கிறது.
முதல் பாகத்தில் காட்டையும், இரண்டாவது பாகத்தில் தண்ணீரையும் அடிப்படையாக கொண்டு அவதார் படம் வெளியானது. தற்போது நெருப்பை அடிப்படையாக கொண்டு மூன்றாவது பாகம் வெளியாகி இருக்கிறது.
அதற்கான புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. இப்படத்தின் டிரெய்லர் வரும் 25ஆம் தேதி வெளியாகும் எனவும், படம் டிசம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ள தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ் படத்தின் இடைவேளையில் திரையரங்குகளில் பிரத்தியேகமாக டிரெய்லரைப் பார்க்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவதாருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கும் நிலையில், இந்த வார இறுதியில் மார்வெல் மற்றும் அவதார் ரசிகர்கள் ஒரே நேரத்தில் திரையரங்குகளுக்கு படையெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.