Korean Fried Chicken: மொறுமொறுப்பின் உச்சம்! ரகசிய ‘டபுள்-ஃபிரை’ ரெசிபி!

Published On:

| By Santhosh Raj Saravanan

authentic-korean-fried-chicken-recipe-double-fry-2026

தற்போது உலகம் முழுவதும் அதிகமாக டிரன்ட் ஆகும் உணவுகளில் ஒன்று— Korean Fried Chicken. உணவு பிரியர்களுக்கு இது ஒரு டிஷ் மட்டுமில்லை, இது ஒரு அனுபவம். வெளியில் மொறுமொறுப்பாகவும் உள்ளே மென்மையாக உள்ள சிக்கனும்.. நாவில் பல வித உணர்வுகளை தூண்டும் sauce-ம் இதை மற்ற fried chicken-ல் இருந்து வேறுபடுத்துகிறது.

இந்த சிக்கனை முதலில் பார்த்தால், இது நம்ம regular fried chicken தானே? என்று தோன்றலாம். ஆனால் ஒரு bite எடுத்தவுடன் தான் வித்தியாசம் புரியும். வெளியே ஒரு கண்ணாடி போல உடையும் crisp layer, உள்ளே soft-ஆன, juicy chicken — இந்த contrast தான் அதன் magic. மற்ற மற்ற fried chicken-ஐ விட ஏன் இது மட்டும் இவளவு ருசி என்று தெரியும். இதற்குப் பின்னாலிருக்கும் ரகசியம் ஒன்றே ஒன்று தான் அது செய்யப்படும் technique அதாவது double frying method.

ADVERTISEMENT

சரி அதை எப்படி செய்வது என்று இப்போது படி படியாக பார்க்கலாம்:

ADVERTISEMENT

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் விங்ஸ் அல்லது drumstick –   1 கிலோ
  • இஞ்சி விழுது, பூண்டு, உப்பு, மிளகுத் தூள் – தலா 1 டீஸ்பூன்
  • உருளைக்கிழங்கு மாவு (Potato Starch) / சோள மாவு –   1 கப்
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

ADVERTISEMENT

Step 1: சிக்கனை தயார் செய்தல்
சிக்கனை நன்றாக கழுவி, tissue paper அல்லது துணி வைத்து நன்றாக துடைத்து உலர்த்தவும். ஈரம் கொஞ்சம்கூட இருக்கக்கூடாது — இதுதான் crispiness-க்கு மிகவும் முக்கியம்.

Step 2: Marination
சிக்கனில் இஞ்சி விழுது, பூண்டு விழுது, உப்பு , மிளகுத் தூள் இவைகளை சேர்த்து நன்றாக கலக்கவும்.பின் அதை 30 நிமிடம் ஊறவைக்கவும். ஒரு pinch baking soda சேர்த்தால் இன்னும் soft ஆகும், ஆனால் இது முழுக்க முழுக்க optional-தான்

Step 3: Coating
ஒரு bowl-ல் potato starch அல்லது corn flour எடுத்து, மேரினேட் செய்த சிக்கனை அதில் போட்டு நன்றாக coat செய்யவும். எல்லா sides-லும் அந்த மாவு சமமாக பரவியிருக்க வேண்டும்.

Step 4: First Fry

எண்ணெயை medium heat-ல் சுமார் 160°C  வரும் வரை காயவைக்கவும் . அதில் சிக்கனை போட்டு 7–8 நிமிடம் வரை fry செய்யவும்.  light golden color வந்ததும் எடுக்கவும்

பிறகு அதை 5 நிமிடத்திற்கு restல் வைக்கவும் (wire rack இருந்தால் best)

Step 5: Second Fry

இப்போது எண்ணெயை high heat-ல் அதாவது சுமார் 190°C வரை சூடாக்கவும். அதில் சிக்கனை மீண்டும் 2–3 நிமிடம் வரை fry செய்யவும். இதுதான் super crisp texture வரும் moment!

Step 6: Sauce Tossing/Glazing
இந்த dish-ன் உண்மையான ஹீரோ அந்த சாஸ்தான். soy garlic sauce — salty, sweet, garlicky combination; அல்லது spicy gochujang — கொஞ்சம் காரம், கொஞ்சம் tangy, கொஞ்சம் sweet.

ஒரு pan-ல் உங்களுக்கு பிடித்த sauce-ஐ சேர்த்து சுட வைக்கவும். சாஸ் சிறிது thick ஆக ஆரம்பித்தவுடன், fried chickenஐ சேர்த்து toss செய்யவும்.  ஒவ்வொரு piece-க்கும் sauce coat ஆக வேண்டும்.

Step 7: Final Touch

மேலே sesame seeds தூவலாம். spring onion garnish செய்யலாம்.  hot-ஆக serve செய்யவும்.

இதை ஒரு simple fried chicken recipe-ஆக பார்க்க முடியாது. இது texture, technique, timing, taste — எல்லாம் சேர்ந்து உருவாகும் ஒரு complete experience. அதனால்தான் 2026-ல் கூட, Korean Fried Chicken ஒரு trend அல்ல; அது ஒரு obsession ஆக மாறி இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share