“கனடா, யுகேவை விட இப்போ பலரோட சாய்ஸ் ஆஸ்திரேலியா தான்!” தரமான கல்வி, படிக்கும்போதே பகுதிநேர வேலை, படிப்பு முடிந்ததும் நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பு… இப்படிப் பல பிளஸ் பாயிண்டுகள் இருப்பதால் ஆஸ்திரேலியா செல்லத் துடிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், விசா நடைமுறைகள் கொஞ்சம் ஸ்டிட்ரிக்ட் ஆகிவிட்டன.
ஆஸ்திரேலியா ஸ்டூடண்ட் விசா (Student Visa) வாங்குவது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை? படிப்பு முடிந்ததும் அங்கேயே செட்டில் ஆக முடியுமா? முழு விவரங்கள் இதோ.
எந்த விசாவுக்கு அப்ளை பண்ணனும்?
நீங்கள் ஆஸ்திரேலியாவில் முழு நேரமாகப் படிக்க விரும்பினால், விண்ணப்பிக்க வேண்டிய விசா பெயர்: Student Visa (Subclass 500).
இந்த விசா இருந்தால் நீங்கள் படிக்கும் காலம் வரை (அதிகபட்சம் 5 ஆண்டுகள்) அங்கே தங்கலாம்.
விண்ணப்பிக்கத் தேவையான முக்கிய ஆவணங்கள் (Checklist):
விசா அப்ளை பண்ணுவதற்கு முன் இந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாம் ரெடியா இருக்கானு செக் பண்ணுங்க:
- CoE (Confirmation of Enrolment): ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தில் உங்களுக்கு இடம் கிடைத்துவிட்டது என்பதற்கான உறுதிச்சான்று. இதுதான் முதல் படி.
- ஆங்கிலப் புலமை (English Proficiency): IELTS, TOEFL அல்லது PTE போன்ற தேர்வுகளில் போதிய மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
- GS (Genuine Student) சான்று: “நான் உண்மையிலேயே படிக்கத்தான் வர்றேன்… வேற எந்தத் தில்லுமுல்லும் பண்ண மாட்டேன்” என்று நிரூபிக்க வேண்டும். (முன்பு இது GTE என்று இருந்தது, இப்போது GS என மாற்றப்பட்டுள்ளது).
- நிதி ஆதாரம் (Proof of Funds): உங்களால் கல்லூரி ஃபீஸ் மற்றும் அங்கே தங்கும் செலவைச் சமாளிக்க முடியும் என்பதற்கான பேங்க் பேலன்ஸ் அல்லது லோன் விவரங்களைக் காட்ட வேண்டும்.
- ஹெல்த் இன்சூரன்ஸ் (OSHC): ஆஸ்திரேலியாவில் இருக்கும் காலம் வரை மருத்துவக் காப்பீடு (Overseas Student Health Cover) எடுத்திருக்க வேண்டும்.
வேலை பார்க்க அனுமதி உண்டா? நிச்சயமாக! படிக்கும்போதே செலவைச் சமாளிக்க மாணவர்கள் பகுதிநேர வேலை பார்க்கலாம்.
- விதிமுறை: இரண்டு வாரங்களுக்கு (Fortnight) அதிகபட்சம் 48 மணி நேரம் வேலை பார்க்கலாம்.
- விடுமுறை நாட்களில்: வரம்பு இல்லாமல் முழு நேரம் (Unlimited hours) வேலை பார்க்கலாம்.
படிப்பு முடிந்ததும் அங்கேயே இருக்கலாமா? (Post-Study Work)
படிப்பு முடிந்த உடனே ஊருக்குக் கிளம்பத் தேவையில்லை. Temporary Graduate Visa (Subclass 485) மூலம் அங்கேயே தங்கி வேலை தேடலாம்.
- கால அளவு: நீங்கள் படித்த படிப்பு (Bachelor’s, Master’s, PhD) மற்றும் இடத்தை (Regional Area) பொறுத்து 2 முதல் 4 ஆண்டுகள் வரை விசா கிடைக்கும். சமீபத்தில் இதற்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியா விசா கிடைக்கிறது இப்போ கொஞ்சம் டஃப்… உஷாரா இருங்க!
- பணம் கையில் இருக்கணும்: சும்மா பேங்க் ஸ்டேட்மென்ட் காட்டினால் போதாது. அந்தப் பணம் உங்கள் கணக்கில் (அல்லது பெற்றோர் கணக்கில்) உண்மையாகவே இருக்கிறது என்பதை ஆஸ்திரேலிய இமிகிரேஷன் அதிகாரிகள் இப்போது துருவித் துருவி விசாரிக்கிறார்கள்.
- மொழித்திறன்: IELTS/PTE ஸ்கோர் குறைவாக இருந்தால் விசா ரிஜெக்ட் ஆக வாய்ப்பு அதிகம். அதனால் நல்ல ஸ்கோர் வாங்குவது முக்கியம்.
- ஏஜென்ட் ஜாக்கிரதை: அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்கள் மூலம் மட்டும் விண்ணப்பியுங்கள். போலியான ஆவணங்களை வைத்தால், விசா நிராகரிக்கப்படுவதோடு, 10 ஆண்டுகள் வரை தடை விதிக்கவும் வாய்ப்புள்ளது.
விசா விதிமுறைகள் அடிக்கடி மாறக்கூடியவை. விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை (immi.homeaffairs.gov.au) ஒருமுறை பார்ப்பது நல்லது.
