தென் மாவட்ட பயணிகள் கவனத்துக்கு.. அம்ரிதா, குருவாயூர், அந்தியோதயா ரயில் சேவைகளில் மாற்றம்!

Published On:

| By Mathi

Train Services

தென் மாவட்டங்களில் இயக்கப்படும் அம்ரிதா, குருவாயூர், அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்டவைகளின் சேவைகளில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.Southern District Trains

திருவனந்தபுரம் கோட்டத்தில் ரயில்வே பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் சில ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன.

திருச்சியில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22627) ஜூலை 9-ந் தேதி, வள்ளியூர் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். வள்ளியூர்- திருவனந்தபுரம் இடையேயான ரயில் சேவை ரத்து செய்யப்படும். திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22628) ஜூலை 9-ந் தேதி வள்ளியூரில் இருந்து பிற்பகல் 1.20 மணிக்கு திருச்சிக்குப் புறப்படும்.

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை- திண்டுக்கல் வழியாக நாகர்கோவில் வரை இயக்கப்படும் அந்தியோதயா (20691) எக்ஸ்பிரஸ் ரயில், ஜூலை 8, ஜூலை 9 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி வரை மட்டும் இயக்கப்படும். இந்த இரு நாட்களிலும் நெல்லை- நாகர்கோவில் இடையேயான சேவை ரத்து செய்யப்படும். நாகர்கோவிலில் இருந்து ஜூலை 9-ந் தேதி புறப்படுவதற்கு பதிலாக, அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20692), திருநெல்வேலியில் இருந்து மாலை 5.10 மணிக்கு தாம்பரத்துக்கு புறப்படும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share