ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் கனிவான கவனத்துக்கு- ரயில் சேவைகளில் மாற்றம்!

Published On:

| By Minnambalam Desk

Train Services

ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும் மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில் சேவைகளில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Rameswaram Trichy Train Services

திருச்சியில் இருந்து நாள்தோறும் காலை 7.05 மணிக்கு ராமேஸ்வரம் செல்லக் கூடிய எக்ஸ்பிரஸ் ரயில் (16849), ஜூலை 7, ஜூலை 8, ஜூலை 9, ஜூலை 10, ஜூலை 11 மற்றும் ஜூலை 14, ஜூலை 15 ஆகிய நாட்களில் மானாமதுரை வரை மட்டும் இயக்கப்படும். மானாமதுரை- ராமேஸ்வரம் இடையேயான இந்த ரயில் சேவைகள் மேலே குறிப்பிட்ட நாட்களில் ரத்து செய்யப்படுகின்றன.

ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 3 மணிக்கு திருச்சிக்குப் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16850) ஜூலை 7, ஜூலை 8, ஜூலை 9, ஜூலை 10, ஜூலை 11 மற்றும் ஜூலை 14, ஜூலை 15 ஆகிய நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படாது; மேலே குறிப்பிட்ட நாட்களில் மானாமதுரையில் இருந்து திருச்சிக்கு காலை 6.55 மணிக்கு இந்த எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும்.

ராமேஸ்வரத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் (07696) ஜூலை 4 மற்றும் ஜூலை 11 ஆகிய தேதிகளில் காலை 9.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 7 மணிக்கு அதாவது சுமார் 9.50 மணிநேரம் தாமதமாக புறப்படும்.

கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16322) இன்று ஜூலை 3-ந் தேதி முதல் ஜூலை 15-ந் தேதி வரை திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். திண்டுக்கல்- நாகர்கோவில் இடையே இந்த ரயில் சேவை இயக்கப்படாது.

கன்னியாகுமரியில் இருந்து ஹவுரா செல்லும் 12666 எக்ஸ்பிரஸ் ரயில், ஜூலை 5, ஜூலை 12 ஆகிய நாட்களில் மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாது; இதற்கு மாற்றாக விருதுநகர்- மானாமதுரை- காரைக்குடி- திருச்சி வழியாக இயக்கப்படும்.

கன்னியாகுமரியில் இருந்து ஹைதராபாத் செல்லும் சிறப்பு ரயில் 07229 ஜூலை 4, ஜூலை 11 ஆகிய நாட்களில் மதுரை- திண்டுக்கல் வழியாக இயக்கப்படாது; விருதுநகர்- மானாமதுரை- திருச்சி வழியாக இயக்கப்படும்.

நாகர்கோவிலில் இருந்து ஜூலை 20-ந் தேதி காலை 6.15 மணிக்கு மும்பைக்கு புறப்படும் 16352 எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை- திண்டுக்கல் வழியாக செல்லாது; விருதுநகர்- மானாமதுரை- காரைக்குடி- திருச்சி வழியாக இயக்கப்படும்.

மதுரை- காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில் (07192) ஜூலை 9-ந் தேதி 1.20 மணிநேரம் தாமதமாக புறப்படும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share