ADVERTISEMENT

மதுரை பாண்டியன், ராமேஸ்வரம் சேது, திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளின் கனிவான கவனத்துக்கு- முக்கிய மாற்றம்!

Published On:

| By Mathi

Train Passengers

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வந்து சேரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நவம்பர் 9-ந் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை 6.35 மணிக்கு வந்து சேரும் Sethu SF Express (வண்டி எண் 22662) நவம்பர் 9-ந் தேதி வரை தாம்பரத்திலேயே நிறுத்தப்படும்.

ADVERTISEMENT

இதேபோல ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை 6.45 மணிக்கு வந்து சேரும் Rameswaram – Chennai Egmore Express (வண்டி எண் 16752) நவம்பர் 9-ந் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோழன் எக்ஸ்பிரஸ்

ADVERTISEMENT

சென்னை எழும்பூர்- திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் (22675) செப்.11 முதல் நவம்பர் 10-ந் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வரும் சோழன் எக்ஸ்பிரஸ் (22675) எழும்பூர் வரை இயக்கப்படும்.

ADVERTISEMENT

பாண்டியன் எக்ஸ்பிரஸ்

மதுரை- சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் (12636) நவம்பர் 9 வரை தாம்பரத்திலேயே நிறுத்தப்படும்.

சென்னை எழும்பூர்- மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் (12637) சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share