கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை (Coimbatore–Nagercoil Express) மற்றும் மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
திண்டுக்கல்- வாடிப்பட்டி- சோழவந்தான் – சமயநல்லூர் ரயில் நிலையங்களிடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால் திண்டுக்கல் வழியே செல்லும் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்தாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16322) ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் ஆகஸ்ட் 23-ந் தேதி வரை (ஆகஸ்ட் 15 தவிர்த்து) திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். திண்டுக்கல்- நாகர்கோவில் இடையே மேற்குறிப்பிட்ட நாட்களில் இந்த ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

பயணிகளின் வசதிக்காக, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் ஆகஸ்ட் 23-ந் தேதி வரை (ஞாயிறு, புதன்கிழமைகள் மற்றும் ஆகஸ்ட் 15 தவிர்த்து) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.05 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும் அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த சிறப்பு ரயில் நிறுத்தப்படும்.
மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் 16847 எக்ஸ்பிரஸ் ரயில் சேவையானது, ஆகஸ்ட் 3, ஆகஸ்ட் 6, ஆகஸ்ட் 10, ஆகஸ்ட் 13, ஆகஸ்ட் 17, ஆகஸ்ட் 20 ஆகிய நாட்களில் திருச்சியில் இருந்து திண்டுக்கல் வழியாக செல்லாமல் புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும்.