கோவை பீளமேடு, ஹோப் கல்லூரி பகுதியில் ரயில்வே மேம்பாலம் பகுதியில் இரும்பு பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் 7 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையின் பிரதான சாலைகளில் ஒன்றான அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்ட் வின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
95 விழுக்காடு பணிகள் முடிந்த நிலையில் ஹோப்ஸ் பகுதியில் ஏற்கனவே ரயில்வே மேம்பாலம் இருக்கும் இடத்தில் தூண்கள் அமைப்பதில் சிக்கல் உள்ளதால் அங்கு 52 மீட்டர் இடைவெளிக்கு இரும்பு கர்டர் கொண்டு பாலத்தை இணைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக வரும் 13 ஆம் தேதி வரை அவிநாசி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று நள்ளிரவில் இரும்பு கர்டர் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தனர். இந்த பணிகள் காரணமாக கோவை ரயில் நிலையம் வரும் 7 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகின்றன.
இந்த பணிகள் காரணமாக,
- திருவனந்தபுரம்-மைசூரு தினசரி விரைவு ரெயில் (எண்: 16316) கன்னியாகுமரி-திப்ரூகர் விரைவு ரெயில் (எண்: 22503) ஆகியவை போத்தனூர் – இருகூர் வழியாக மாற்றுப்பாதைகளில் இயக்கப்படும். போத்தனூர் கூடுதல் நிறுத்தமாக செயல்படும்.
- ஜூலை 12-ந்தேதி கன்னியாகுமரி-ஸ்ரீ மாதா வைஷ்னவ் தேவி கட்ரா வாராந்திர விரைவு ரயில் (எண்:16317), ஜூலை 13-ந்தேதி எர்ணாகுளம்-பாட்னா வாராந்திர விரைவு ரயில் (எண்:2266) ஆகியவை போத்தனூர்-இருகூர் வழியாக இயக்கப்படும்.
- காரைக்கால்-எர்ணாகுளம் தினசரி விரைவு ரயில் (எண்:16187), சென்னை சென்ட்ரல்-மேட்டுப்பாளையம், நீலகிரி தினசரி எக்ஸ்பிரஸ் ரயில், இருகூர்-போத்தனூர் வழியாக இயக்கப்படும்.
- ஜூலை 11-ந் தேதி, விசாகப்பட்டினம்-கொல்லம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 18567) இருகூர்-போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும்.
மேலே குறிப்பிட்ட இந்த ரயில்கள் கோவை ரயில் நிலையத்திற்கு செல்லா