பிகார் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அம்மாநில துணை முதல்வர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 6) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்மாநில துணை முதல்வரும், பாஜக தலைவருமான விஜய் குமார் சின்ஹா லக்கிசராய் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அப்பகுதியில் உள்ள வாக்கு சாவடிகளில் இன்று காலை முதல் விஜய் குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கோரியாலரி கிராமத்திற்கு விஜய் குமார் சென்ற போது ராஷ்டீரிய ஜனதா தளத்தின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அவரது கார் மீது கற்கள் மற்றம் காலணிகள் வீசப்பட்டு, அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில் தனது பூத் ஏஜெண்டுகளையும் வாக்கு செலுத்த ஆர்ஜேடி கட்சியினர் அனுமதிக்கவில்லை என விஜய் குமார் சின்ஹா குற்றம் சாட்டி உள்ளார்.
