அடல் ஓய்வூதியத் திட்டம் 2031 வரை நீட்டிப்பு- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On:

| By Mathi

Atal Pension Yojana

அடல் ஓய்வூதியத் திட்டத்தை (Atal Pension Yojana – APY) 2030-31-ம் நிதியாண்டு வரை தொடர்வதற்கும், நிதிப்பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்கும் மக்கள் தொடர்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான நிதி ஆதரவை நீட்டிப்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஜனவரி 21-ந் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.

2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அடல் ஓய்வூதியத் திட்டம், 18 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்தியக் குடிமக்கள் சேமிப்பு வங்கி அல்லது அஞ்சலக சேமிப்புக் கணக்கு மூலம் இதில் இணைந்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ், சந்தாதாரர்கள் 60 வயதை அடைந்தவுடன், அவர்களின் பங்களிப்பைப் பொறுத்து மாதம் ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரை உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். சந்தாதாரரின் மறைவுக்குப் பிறகு, துணைவர் அதே ஓய்வூதியத்தைப் பெறுவார். இத்திட்டத்தை 2031-ம் ஆண்டு வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

2026 ஜனவரி 19-ந் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 8.66 கோடிக்கும் அதிகமானோர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share