சட்டப்பேரவைத் தேர்தல் : சென்னைக்கு 53 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்!

Published On:

| By Kavi

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வெளி மாவட்டங்களில் இருந்து 53 காவல் ஆய்வாளர்களை சென்னைக்கு பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை முழு வீச்சில் அரசியல் கட்சியினர் செய்து வருகின்றனர். தேர்தல் ஆணையமும்  தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்கவுள்ளது. 

ADVERTISEMENT

இதற்கிடையே தேர்தலை முன்னிட்டு மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.  அதன்படி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகிறது தமிழக அரசு. 

இந்த நிலையில் பிற மாவட்டங்களில் பணியாற்றி வந்த 53 காவல் ஆய்வாளர்கள் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி சென்னை வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தலுக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து காவல்துறை உயாதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் 38 மாவட்ட எஸ்.பி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், மண்டல ஐ.ஜி.க்கள், காவல் ஆணையர்கள் ஆகியோர் பங்கேற்றனர். 

அப்போது பணப்பறிமாற்றம் உள்ளிட்ட எந்த தேர்தல் நடத்தை விதிமீறல்களும் இருக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையர் அறிவுறுத்தியிருக்கிறார். 

ADVERTISEMENT

இந்தசூழலில் இன்று (மார்ச் 6) சென்னைக்கு 53 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share