ஆசிய கோப்பை டி-20 சூப்பர் 4-வது சுற்றில் இந்திய அணி வெல்வதற்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்.
17-வது ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. ஆசிய கோப்பை டி20 போட்டிகளில் இந்திய அணியை 2-வது முறையாக பாகிஸ்தான் எதிர்கொண்டிருக்கிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்து வீச்சை தேர்வு செய்தார். டாஸ் வீசப்பட்ட நிகழ்வில், வழக்கம் போல பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகாவுடன், இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கை குலுக்காமல் புறக்கணித்தார்.
இதனையடுத்து பாகிஸ்தான் அணி, ஃபகர் சமாம்- ஃபர்ஹான் ஜோடியுடன் பேட்டிங்கை தொடங்கியது. ஆட்டத்தின் பவர் ப்ளே ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 25 ரன்களை எடுத்தது பாகிஸ்தான். நடப்பு போட்டிகளில் பவர் பிளே ஓவர்களில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் அதிகபட்ச ஸ்கோர் இது. பவர் ப்ளே முடிவில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன்களை எடுத்தது.
பாகிஸ்தானின் ஃபர்ஹான், 34 பந்துகளில் அரைசதமடித்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணியில் ஃபர்ஹான் அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்திருந்தார். இந்தியாவின் ஹரித் ஷிவம் துபே 2, குல்தீப் யாதவ் 1, ஹர்திக் பாண்ட்யா 1 விக்கெட் எடுத்திருந்தனர்.
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடுகிறது.