சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 23ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரும் 23ஆம் தேதி பொதுவிடுமுறை என அறிவித்துள்ளார்.

அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அன்று கட்டாய விடுமுறையாகும்.
தொழிலாளர் நலத்துறை சட்டத்தின்படி, தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
100% வாக்குப்பதிவை உறுதி செய்யவும், வாக்காளர்கள் சிரமமின்றி தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றவும் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
