தமிழக காங்கிரஸ் கமிட்டியில் 71 மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. இத்தேர்தலில் கூட்டணி ஆட்சி- அதிகாரப் பகிர்வு மற்றும் அதிக தொகுதிகளை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. கூட்டணி ஆட்சி அல்லது அதிகாரப் பகிர்வை திமுக தலைமை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.
இதனையடுத்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் நேற்று முன்தினம் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் 71 மாவட்டங்களுக்கான தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
