தமிழக அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தில் ‘இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பு’-க்கு விண்ணப்பிக்கலாம்!

Published On:

| By Mathi

தமிழ்நாடு அரசு புதியதாக நிறுவி உள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனம் 2025-26-ம் கல்வி ஆண்டு முதல் இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பை (Post Graduate Diploma in Journalism) வழங்குகிறது. இங்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் பயிற்றுவிக்கப்படும்.

இந்நிறுவனத்தில் அச்சு, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பு அளிக்கும் வண்ணம் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை 24.07.2025 முதல் நடைபெறுகிறது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 03.08.2025

விண்ணப்பிக்க https://cij.tn.gov.in/

ADVERTISEMENT

இக்கல்வி நிறுவனம் இதழியலுடன் இணைந்த டிஜிட்டல் மீடியா பயிற்சியையும் காட்சி தொடர்பியல் திறன் உள்ளிட்ட இதழியல் கல்வியையும் வழங்க இருக்கிறது.

இக்கல்வி நிறுவனத்தில் சேர விரும்பும் வெளியூர் மாணவர்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான விடுதி வசதிகள் உள்ளன. ஊடகவியல் கல்வியைப் பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

பாடத்திட்டம்:

இதழியல்

இணைய ஊடகம்

காட்சி ஊடகம்

மாணவர் சேர்க்கைக்கான தகுதிகள்:

அடிப்படை தகுதி: குறைந்தபட்சம் 50% மதிப்பெண் அல்லது அதற்கு இணையான CGPA-வுடன் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக் கழகத்தில் இள நிலை பட்டப் படிப்பு பெற்றிருக்க வேண்டும். BC/BCM/MBC/DNC/SC/SCA/ST ஆகியவர்களுக்கு பட்டப் படிப்பில் தேர்ச்சி போதுமானது.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் ஆண்டில் ஜூலை 1-ம் தேதியன்று 41 வயதை கடந்திருக்க கூடாது.

இடஒதுக்கீடு: தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீடு கொள்கையை இந்நிறுவனம் பின்பற்றும்.

விண்ணப்பத் தொகை ரூ.100

கல்விக் கட்டணம் முதல் அரையாண்டிற்கு ரூ.5000 மற்றும் இரண்டாவது கல்வியாண்டிற்கு ரூ.5000 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தேர்வின் முறையில் முதற்கட்டமாக 3 கேள்விகளுக்கு குறிப்பிட்ட வார்த்தைகளுக்குள் எழுத்துப்பூர்வமான பதில் அளிக்க வேண்டும்.

  1. நான் ஏன் ஊடகவியலாளராக விரும்புகிறேன்? (200 வார்த்தைகள்).
  2. உங்கள் பார்வையில் தமிழ்நாடு தனித்துவமாய் திகழ்வதற்கு காரணம் என்ன? (500 வார்த்தைகள்).
  3. உங்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு புத்தகம் / ஒரு திரைப்படம் பற்றி எழுதவும் (300 வார்த்தைகள்).

மாணவர்கள் தங்கள் பதிவுகளை ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதலாம். ஆனால் இரண்டு மொழிகளில் கலந்து எழுதக் கூடாது. விண்ணப்பிக்கும் அனைவரும் தாங்கள் எழுதிய எழுத்துகள் அவர்களாலேயே எழுதப்பட்டன என்றும், வேறு ஒருவரின் எழுத்தையோ அல்லது தொழில்நுட்ப உதவியுடனோ உருவாக்கப்படவில்லை என்ற உறுதி மொழியை அளிக்க வேண்டும்.

விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ள CIJ இணையத்தளதில் வசதி உண்டு. இந்த இணையத்தளதின் மூலமாகதான் உங்கள் விண்ணப்ப தொகையை செலுத்த முடியும்.

இறுதி தேர்வுக்கு உங்களுடைய முந்தைய தேர்வுகளின் மதிப்பெண்கள், மூன்று கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் நேர்காணலில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் முடிவு செய்யப்படும். வெளி ஊரில் இருக்கும் மாணவர்கள் இணைய வழியாக நேர்காணலில் பங்கு பெறும் வாய்ப்பு உண்டு.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share