புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமாரின் முன் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், ஆகியோர் மீது குற்ற எண் 855/25 U/s 105, 110, 125(b), 223 BNS Act & 3 of TNPPDL Act இன் படி 5 பிரிவுகளில் கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி ஜோதிராமன் முன் இன்று (அக்டோபர் 3) விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பிலும், மனுதாரர் தரப்பிலும் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இரு தரப்பு வாதங்களையும் தொடர்ந்து நீதிபதி ஜோதிராமன், புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் மதுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் இருவரும் விரைவில் கைதாக வாய்ப்பிருக்கதாக தகவல்கள் வருகின்றன. 3 தனிப்படை இவர்களை தேடி வருகிறது.