ADVERTISEMENT

மகேஷ்பாபு குடும்பத்தில் இருந்து மேலும் ஒரு நாயகன், நாயகி!

Published On:

| By uthay Padagalingam

தெலுங்கு திரையுலகில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், மோகன்பாபு, மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் மற்றும் சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் கைகள் ஓங்கியிருப்பதாகச் சொல்லப்படுவதுண்டு.

’அது உண்மைதானோ’ என்று எண்ணும்வகையில், அவர்களது குடும்பத்தின் வாரிசுகள் தொடர்ந்தாற்போலப் படங்களில் நாயகர்களாக, நாயகிகளாக, தயாரிப்பாளர்களாகக் களமிறங்குவதும் நிகழ்ந்து வருகிறது.

ADVERTISEMENT

கடந்த ஐம்பதாண்டு காலத் தெலுங்கு நடிகர், நடிகையரின் பட்டியலை உற்றுநோக்கினால் அதனைத் தெரிந்துகொள்ள முடியும்.

தெலுங்கு நடிகர் மறைந்த கிருஷ்ணா – இந்திரா தம்பதியரின் மூத்த மகன் ரமேஷ் பாபு. முன்னணி நாயகனான மகேஷ்பாபுவின் சகோதரர். 2022இல் இவர் மறைந்தார்.

ADVERTISEMENT

மகேஷ் பாபு போன்றே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தொண்ணூறுகளில் சுமார் ஒரு டஜன் படங்களில் நாயகனாகவும் நடித்தார். பின்னர் அர்ஜுன், தூக்குடு உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்தார்.

ரமேஷ், மகேஷுக்கு பத்மாவதி, மஞ்சுளா, பிரியதர்ஷினி என மூன்று சகோதரிகள். இவர்களில் மஞ்சுளா சில படங்களில் நடித்திருக்கிறார்.

ADVERTISEMENT

பிரியதர்ஷினியின் கணவர் சுதீர்பாபுவும் தற்போது தெலுங்கில் நாயகனாக நடித்து வருகிறார். இக்குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த கல்லா அசோக்கும் ஒரு நடிகர் தான்.

இதுபோக மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா சிரோத்கர், சகோதரர் நரேஷ் ஆகியோரும் ரசிகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் தான்.

அந்த வரிசையில் ரமேஷ் பாபுவின் இரு பிள்ளைகளும் இப்போது இணைந்துள்ளனர்.

ஆர்எக்ஸ் 100 தந்த அஜய் பூபதியின் இயக்கத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்  ரமேஷ்பாபுவின் மகன் ஜெயகிருஷ்ணா.

அதே போன்று மகள் பாரதியும் ஒரு புதிய படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறார். இயக்குனர் தேஜாவால் இவர் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.

ஒரு விழாவில் மகேஷ்பாபுவின் ‘குண்டூர் காரம்’ படப் பாடலுக்கு பாரதி நடனமாடிய விதம் இயக்குனர் தேஜாவைக் கவர்ந்ததால் இந்த வாய்ப்பு கிட்டியதாகச் சொல்லப்படுகிறது.

ஒரேநேரத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆண், பெண் இருவரும் வெவ்வேறு படங்களில் நாயகன் நாயகியாக அறிமுகமாக இருப்பது தெலுங்கு திரையுலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இயக்குனர் தேஜாவும் தனது மகன் அமிதோவ்வை நாயகனாக அறிமுகம் செய்ய இருக்கிறார். அவர் இயக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியுள்ளது.

ஒருகாலத்தில் நட்சத்திரக் குடும்பம் என்பதற்கு உதாரணமாக இந்தி திரையுலகில் இருக்கும் சிலரை உதாரணம் காட்டுவார்கள். இப்போது அந்த இடத்தைத் தெலுங்கு நட்சத்திரங்கள் பிடித்துக்கொண்டார்கள் போல..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share