வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவத்தில் நிறைய குழப்பம் உள்ளது. அதிலும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையில் ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளது. இதற்கு தலைமைத் தேர்தல் அதிகாரி உடனடியாக தீர்வு காண வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் நடந்த பா.ஜ.க விவசாயிகள் அணி கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், வரும் 19 ம் தேதி பிரதமர் மோடி கோவை வருகின்றார். தென்னிந்திய இயற்கை விவசாயிகள் சம்மேளனம் கோவையில் நடக்க இருக்கிறது. இந்நிகழ்வில் ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட இயற்கை விவசாயிகளையும், 50 க்கும் மேற்பட்ட
விஞ்ஞானிகளையும் பிரதமர் சந்திகிறார் என்றார்.
விளை நிலங்களில் கார்பன் அளவு குறைந்து வருவதை சுட்டிக்காட்டியவர், விவசாய பணிகளுக்கு அதிக அளவு மானியம் வழங்க வேண்டும். பிரதமர் அவர்கள் நேரத்தை ஒதுக்கி முழுமையாக
விவசாய நிகழ்விற்கு மட்டும் தென்னிந்தியாவிற்கு வருகின்றார் . பா.ஜ.க கட்சி நிகழ்வு எதுவும் கிடையாது என்றார்.
அப்போது SIR படிவத்தில் உள்ள குளறுபடிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு Sir படிவத்தில் நிறைய சந்தேகம் இருக்கின்றது, ஆன்லைனில் விண்ணப்பதில் குளறுபாடிகள் இருப்பது உண்மைதான், இதைத் தேர்தல் அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். ஆனாலும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். நிறைய குளறுபடிகள் இருக்கின்றது என்பது உண்மைதான் என ஒப்புக் கொண்டார்.
மேலும் பேசிய டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் ஆஜராகாதது குறித்த கேள்விக்கு, அவர் நீதிமன்றத்திடம் உடல் நலம் சரியில்லை என்று கூறி டி.ஆர். பாலு ஆஜராகவில்லை என சொன்னார்கள், ஆனால் விமான நிலையத்தில் அவரை சிறிது நேரத்தில் பார்த்தேன் , உடல்நிலை பாதித்தது போல தெரியவில்லை. Sir எதிரான போராட்டத்தில் அவர் இருந்ததாக பேப்பரில் செய்தி வந்தது. நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது அவர் போராட்டத்தில் இருந்தார். அதனால் நீதிமன்றம் செல்லும் போது நீதிபதியை ஏமாற்றி விட்டார்கள் என சொல்லாம் என இருக்கிறேன் என்றார்.
மேலும் விவசாய நிலத்தில் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை திரும்ப வேண்டும். விவசாய நிலத்தின் மதிப்பு அதிகரித்து வரும் நிலையில் குழாய் பதிக்கப்படுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. விவசாயத்துக்கு மாநில அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.”என தெரிவித்தார்.
