முதலீடு செய்ய பணம் வந்தது எப்படி – அண்ணாமலை விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Annamalai

தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “இந்தியாவில் முதல் முறையாக டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தை படித்தவர்கள் செய்து இருக்கிறார்கள், குஜராத்தை சேர்ந்த மருத்துவ குழு ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் ஹரியானா, உத்தர பிரதேசம் உட்பட 5 மாநிலங்கள் தொடர்புடைய ஒரு மருத்துவ குழுவும் பிடிபட்டுள்ளது. டாக்டர் குழுவினர் கைது செய்யப்பட்டு இருப்பது மிகப் பெரிய அதிர்ச்சிதான்.

டாக்டர்கள் என்பதால் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள் என அவர்கள் வாக்குமூலம் கொடுத்து இருக்கின்றனர். நவம்பர் 26 இல் மும்பையில் நடந்ததைப் போல செய்ய வேண்டும் என்பதுதான் இலக்கு என சொல்லியிருக்கின்றனர். இது அபாயகரமானது. நாட்டுக்குள் உற்பத்தியாகும் தீவிரவாதம் நமக்கு தேவை இல்லை. 13 பேர் உயிரிழந்து இருப்பது மோசமான தாக்குதல். மதத்தை தவறாக பயன்படுத்தி இதை செய்கின்றனர். ஐந்து மாநிலங்களில் இந்த குழுவினருக்கு தொடர்பு இருக்கும் நிலையில் அரசியல் கடந்து தீவிரவாத குழுவை வேருடன் அழிக்க அனைத்து அரசியல் கட்சியினரும் முன் வர வேண்டும் என்றார்.

ADVERTISEMENT

முதலமைச்சர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி அதிகம் உள்ளது. சரியான அதிகாரிகளை கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். மதத்தின் பெயரில் தீவிரவாதம் நடக்கக் கூடாது; மதத் தலைவர்கள் அதைப் பற்றி திறந்தவெளியில் பேச வேண்டும், ஒன்றிணைந்து சமூக ஒற்றுமையை பேண வேண்டும்,” என்றார்.

அண்ணாமலை தொழில் குறித்து பேசுகையில், தொழிலும் செய்வேன், அரசியலும் செய்வேன், அறக்கட்டளையும் நடத்துவேன், விவசாயமும் செய்வேன். நீங்களும் செய்யுங்கள். உங்களுடைய சொந்த காசில் நன்றாக வாழுங்கள், தவறு செய்தால் சுட்டிக்காட்டுங்கள் என்றார்

ADVERTISEMENT

டிரெயினில் டிக்கெட் எடுக்காமல் வந்தவர்கள் எல்லாம் ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்திருக்கின்றார்கள், நான் அப்படி எதுவும் சேர்க்கவில்லை. முதல்வர் என்ன தொழில் செய்கின்றார் அவருக்கு பணம் எங்கிருந்து வருகிறது. டி.ஆர்.பாலு நீதிமன்றம் வந்த கார் சாராய ஆலை பெயரில் இருக்கிறது. என்னால் யாருக்கும் உபத்திரவம் வராது என்றார்.

இதைத்தொடர்ந்து செலவுகளை நண்பர்கள் தான் பார்த்துக் கொண்டார்கள் என தெரிவித்த உங்களுக்கு முதலீடு செய்ய பணம் எப்படி கிடைத்தது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “5 லட்ச ரூபாய் பங்கு தொகையாக தொழிலில் போட கூட முடியாத அளவிற்கா இருக்கின்றேன்.

ADVERTISEMENT

நிறுவனங்களில் பங்கு தொகை இரண்டு லட்சம் வரை முதலீடு செய்து இருக்கின்றேன். ஆன்லைனில் கம்பெனிகளில் எவ்வளவு பங்கு முதலீடு என்பதை பாருங்கள். அந்த அளவிற்கு கூட தகுதி இல்லாமலா நான் இருக்கிறேன், என் மனைவி வேலை செய்கின்றார். நான் விவசாயம் செய்கின்றேன். 10 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றி கையிருப்பில் பணம் வைத்திருக்கிறேன், எனது அப்பா, அம்மா விவசாயம் செய்கிறார்கள். இப்பொழுதும் ஆட்டுக்குட்டி விற்பனை செய்கின்றோம். என்னால் இரண்டு லட்ச ரூபாய் முதலீடு செய்ய முடியாத அளவிற்கா இருக்கின்றேன்” என்றார்.

விளையாட்டு குறித்து பேசுகையில், “தமிழ்நாடு விளையாட்டில் சிறந்த மாநிலம். ‘அயன்மேன்’ போட்டியை தமிழகத்திலும் நடத்த வேண்டும். அரசியலுக்கு வந்த பின்பு என்னுடைய பிட்னஸ் போய்விட்டது. அதை சரி செய்து கொண்டு இருக்கிறேன். நான் என் பிட்னஸ்யை திரும்ப கொண்டு வர முயற்சித்து வருகின்றேன். full iron man ல் பங்கேற்க வேண்டும் என வேண்டும் என ஆசை என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share