“புரோகிராமிங் இப்போ மாறிடுச்சு… நானே பின்தங்கியதா உணர்றேன்!” – டெஸ்லா முன்னாள் AI தலைவர் அந்த்ரே கார்ப்பதியின் ஓபன் டாக்!

Published On:

| By Santhosh Raj Saravanan

andrej karpathy open letter to software engineers ai coding tools alien technology twitter post

மென்பொருள் உலகில் “கடவுள்” என்று கொண்டாடப்படும் சிலரில் அந்த்ரே கார்ப்பதியும் (Andrej Karpathy) ஒருவர். டெஸ்லாவின் ஆட்டோபைலட் (Autopilot) பிரிவின் முன்னாள் தலைவராகவும், ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் இருந்த இவர், நேற்று வெளியிட்ட ஒரு பதிவு ஒட்டுமொத்த டெக் உலகையும் அதிர வைத்துள்ளது. “ஒரு புரோகிராமராக நான் இந்த அளவுக்குப் பின்தங்கியதாக (Behind) இதுவரை உணர்ந்ததே இல்லை” என்று அவர் வெளிப்படையாகப் பேசியிருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

கார்ப்பதி சொன்னது என்ன? எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மென்பொருள் துறை இப்போது முற்றிலுமாக மாறிக்கொண்டிருக்கிறது (Refactored). முன்பு போல நாம் ஒவ்வொரு வரியாகக் கோடு (Code) எழுதுவது குறைந்துவிட்டது. இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் AI கருவிகளைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தால், நான் இப்போது இருப்பதை விட 10 மடங்கு சக்தியுள்ளவனாக மாற முடியும். ஆனால், அதைச் செய்யத் தவறுவது திறமைக்குறைவு (Skill issue) போலவே உணர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

‘ஏலியன்’ கருவி: தற்போதைய AI கருவிகளை அவர் “வேற்றுகிரகத் தொழில்நுட்பத்துடன்” (Alien Tool) ஒப்பிட்டுள்ளார். “நமக்கு ஒரு சக்திவாய்ந்த வேற்றுகிரகக் கருவி கிடைத்துள்ளது. ஆனால், அதை எப்படிப் பயன்படுத்துவதுதற்கான கையேடு (Manual) மட்டும் கிடைக்கவில்லை. ஒவ்வொருவரும் அதை எப்படிப் பிடிப்பது, எப்படி இயக்குவது என்று தாங்களாகவே கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது” என்று அவர் வர்ணித்துள்ளார்.

சாதாரண இன்ஜினியர்களின் கதி? AI உலகின் ஜாம்பவானான கார்ப்பதியே “நான் பின்தங்கிவிட்டேனோ” என்று பயப்படும்போது, சாதாரண மென்பொருள் பொறியாளர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது.

ADVERTISEMENT
  • கோடிங் ஸ்டைல் மாற்றம்: முன்பு போல மணிக்கணக்கில் உட்கார்ந்து சிண்டாக்ஸ் (Syntax) பிழைகளைத் திருத்தும் காலம் மலையேறிவிட்டது.
  • புதிய சவால்: இப்போது AI கருவி கொடுக்கும் கோட்-ஐ (Code) ஒருங்கிணைப்பதும், அதைச் சரியாக வழிநடத்துவதும்தான் (Prompting) முக்கியத் திறமையாக மாறி வருகிறது.

எச்சரிக்கை மணி: “இந்த மாற்றத்தைப் பார்த்து பயப்படாமல், உடனே செயலில் இறங்குங்கள். இல்லையெனில், நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள் (Roll up your sleeves to not fall behind)” என்று அவர் மென்பொருள் பொறியாளர்களை எச்சரித்துள்ளார். இது வெறும் பயமுறுத்தல் அல்ல, மென்பொருள் உலகின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு முன்னோட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share