தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் தலைமையில் நடந்த பொங்கல் விழாவை அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் புறக்கணித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டிய நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் பொங்கல் விழாக்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான பொங்கல் விழா இன்று (ஜனவரி 14) நடைபெற்றது.
இதில் ராமதாஸ், அவரது மனைவி, மகள் ஸ்ரீகாந்தி மற்றும் பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஆனால், இந்த பொங்கல் விழாவில் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை.
ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே அதிகார மோதல் முற்றியுள்ள நிலையில், அன்புமணியை ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்குவதாகவும் தானே தலைவராக மீண்டும் செயல்வடுவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ராமதாஸ் தலைமையில் நடந்த பொங்கல் விழாவை அன்புமணி புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
