கரூரில் விஜய்யின் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனை வளாகம் முழுவதும் துயரமாக சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர். அமைச்சர் அன்பில் மகேஷ் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் துயரம் தாங்காமல் கலங்கி அன்பில் மகேஷ், “இத்தனை குழந்தைங்க செத்து போய்ட்டாங்களே.. படிச்சு படிச்சு சொன்னாங்களே.. கண்டிஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கடா.. ஃபாலோ பண்ணுங்கடானு..”என கதறி அழுதார்.
தொடரும் உயிரிழப்பு காரணமாக மருத்துவமனை வளாகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.