ADVERTISEMENT

“நோ ஸ்கிரீன், நோ பேட்டரி!” – குழந்தைகளின் மூளையை மாற்றும் ‘அனலாக் பிளேரூம்’ (Analog Playroom)… பெற்றோர்களே கவனிங்க!

Published On:

| By Santhosh Raj Saravanan

analog playroom dopamine detox parenting trend no screen no battery toys tamil article

இன்றைய குழந்தைகளுக்குச் சாப்பாடு ஊட்டுவது கூட யூடியூப் இல்லாமல் நடப்பதில்லை. கையில் போன் இல்லையென்றால், “வீல்… வீல்…” என்று சத்தம் போடும், லைட் எரியும் பேட்டரி பொம்மைகள்தான் அவர்களுக்கு வேண்டும்.

“என் பையன் 2 நிமிஷம் கூட ஒரு இடத்துல உட்கார மாட்டேங்கிறான்,” என்று புலம்பும் பெற்றோரா நீங்கள்? அப்படியென்றால், உலகம் முழுவதும் இப்போது டிரெண்டாகி வரும் அனலாக் பிளேரூம்” (Analog Playroom) கான்செப்ட் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

இதை டோபமைன் டிடாக்ஸ் ஹோம்” (Dopamine Detox Home) என்றும் அழைக்கிறார்கள்.

அது என்ன ‘அனலாக் பிளேரூம்’?

இது குழந்தைகளின் விளையாட்டு அறைதான். ஆனால், இரண்டு முக்கியமான விதிகள் உண்டு:

ADVERTISEMENT
  1. திரைகள் கிடையாது (No Screens): டிவி, ஐபேட், மொபைல் போன் எதுவும் இந்த அறைக்குள் அனுமதி இல்லை.
  2. பேட்டரி பொம்மைகள் கிடையாது (No Battery Toys): பட்டனைத் தட்டினால் பாடும், ஆடும், மின்னும் பொம்மைகள் எதுவும் இருக்காது.

இங்கு மரக்கட்டைகள் (Wooden Blocks), களிமண், துணி பொம்மைகள், பேப்பர், கலர் பென்சில்கள் மற்றும் சமையல் பாத்திர செட்கள் மட்டுமே இருக்கும்.

ஏன் இந்த மாற்றம்?

டிஜிட்டல் திரைகளும், மின்னும் எலக்ட்ரானிக் பொம்மைகளும் குழந்தைகளின் மூளையில் டோபமைன்‘ (Dopamine) என்ற ஹார்மோனை அளவுக்கு அதிகமாகவும், வேகமாகவும் சுரக்க வைக்கின்றன.

ADVERTISEMENT
  • இதனால், குழந்தைகளுக்குப் பொறுமை போய்விடுகிறது.
  • “உடனே சந்தோஷம் வேண்டும்” (Instant Gratification) என்ற மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால் படிப்பதிலோ அல்லது ஓவியம் வரைவதிலோ அவர்களால் நீண்ட நேரம் கவனம் செலுத்த முடிவதில்லை.

கட்டமைக்கப்படாத விளையாட்டு (Unstructured Play):

ஒரு பொம்மையின் பட்டனை அமுக்கினால் அது பாடுகிறது என்றால், குழந்தை அங்கே வெறும் பார்வையாளர்தான்.

  • ஆனால், ஒரு மரக்கட்டையைக் கொடுத்தால், குழந்தை அதைக் காராக, வீடாக அல்லது மொபைல் போனாகக் கூடக் கற்பனை செய்யும்.
  • இதுவே “Unstructured Play”. இது குழந்தையின் மூளையை யோசிக்க வைக்கும்; கற்பனைத் திறனை வளர்க்கும்; முக்கியமாக கவனக்குவிப்பை (Attention Span) அதிகரிக்கும்.
சலிப்பு நல்லது!

“பேட்டரி பொம்மை இல்லனா பையனுக்குப் போர் அடிக்குமே?” என்று கவலைப்படாதீர்கள். உளவியல் நிபுணர்கள் சொல்வது என்னவென்றால், “குழந்தைகளுக்குப் போர் அடிப்பது நல்லது.” அந்தச் சலிப்பிலிருந்து (Boredom) விடுபடத்தான் அவர்கள் தங்கள் மூளையைப் பயன்படுத்திப் புதிய விளையாட்டுகளை உருவாக்குவார்கள்.

கொஞ்சம் சத்தத்தைக் குறைத்து, அமைதியான சூழலைக் கொடுத்துப் பாருங்கள்… உங்கள் குழந்தையின் உள்ளே இருக்கும் படைப்பாளி வெளியே வருவான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share