ரயில் பயணிகள் கவனத்திற்கு.. செப்.25 முதல் ஈரோடு – பீகார் இடையே அம்ரித் பாரத் வாராந்திர ரயில்!

Published On:

| By Pandeeswari Gurusamy

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஈரோடு – பீகார் மாநிலம் ஜோக்பானி இடையே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாராந்திர அம்ரித் பாரத் சேவையின் துவக்க விழா செப்டம்பர் 15, திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த ரயில் சோவையால் தமிழகத்தில் பல பகுதிகளில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பயன்பெறுவார்கள்.

ஈரோடு – பீகார் இடையே அம்ரித் பாரத் வாராந்திர ரயில் சேவை குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஈரோட்டில் இருந்து செப்டம்பர் 25-ந் தேதி முதல் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் காலை 8.10 மணிக்கு புறப்படும் வாராந்திர அம்ரித் எக்ஸ்பிரஸ் (வ.எண்:16601) 3 நாட்கள் கடந்து சனிக்கிழமை மாலை 7 மணிக்கு பீகார் மாநிலம் ஜோக்பானியை சென்றடையும்
மறு மார்க்கமாக செப்டம்பர் 28ம் தேதி பீகாரின் ஜோக்பானியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 3.15 மணிக்கு புறப்படும் வாராந்திர அம்ரித் எக்ஸ்பிரஸ் (வ.எண்:16602) அடுத்து 4 நாட்கள்களுக்கு பிறகு புதன் கிழமை காலை 7.20 மணிக்கு ஈரோடு ஜங்ஷனுக்கு வந்து சேரும். வாராந்திர அம்ரித் பாரத் ரயில் முன்பதிவு வரும் 18ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும்

ADVERTISEMENT

இந்த வாராந்திர அம்ரித் பாரத் ரயில் சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், நாயுடுபேட்டை, கூடூர், ஓங்கோல், விஜயவாடா, கம்மம், வாரங்கல், மஞ்சிரியல், பால்ஹர்ஷா, சந்திரபூர், சேவகிராம், நாக்பூர், பெதுல், கோராடோங்கிரி, இட்டார்சி, பிப்பரியா, கதர்வாரா, ஜபல்பூர், கட்னி, மைஹர், சத்னா, மணிக்பூர், தபாவுரா, ஜஸ்ரா, பிரயாக்ராஜ் சேவ்கி, விந்தியாச்சல், சுனார், பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா, பக்ஸர், ரகுநாத்பூர், ஆரா, தானாபூர், பாடலிபுத்ரா, சோன்பூர், ஹாஜிபூர், ஷாபூர் படோரி, பரவுனி, பெகுசராய், ககரியா, மன்சி, நவ்கசியா, கதிஹார், பூர்ணியா, அராரியா கோர்ட், ஃபோர்ப்ஸ்கஞ்ச் ஆகிய ரயில் நிலையங்களில்நின்று செல்லும்” என கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share