அமமுக தேஜ கூட்டணியில் இல்லையா? எடப்பாடிக்கு டிடிவி தினகரன் பதில்!

Published On:

| By Kavi

AMMK not in nda alliance

தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார். AMMK not in nda alliance

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. பாஜகவுடன் ஏற்கனவே டிடிவி தினகரனின் அமமுகவும் கூட்டணியில் உள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் 2026ல் கூட்டணி ஆட்சிதான் என்று உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்புத் தெரிவித்து வருகிறார்.

இந்தநிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “2026 தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும், கூட்டணி ஆட்சியே அமையும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெறும். முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அமித்ஷாவிடம் கேட்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக இன்று (ஜூலை 25) புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு ஈபிஎஸ், “அவர் சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா… தயவு செய்து வேறு எதாவது கேளுங்கள். அவர் தேஜ கூட்டணியில் இருக்கிறார் என்று சொல்கிறார். அதற்கு நாங்கள் என்ன சொல்ல முடியும். எங்களை பொறுத்தவரை அதிமுக -பாஜக கூட்டணி தான். ஊடகங்களிடம் சிலவற்றை வெளிப்படுத்தலாம். சிலவற்றை வெளிப்படுத்த முடியாது” என்று கூறினார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், “அமித்ஷாவின் முயற்சி அம்மாவின் தொண்டர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான். அதை நாங்கள் ஆதரிக்கிறோம். அமித்ஷா சொன்ன கருத்துகளை என்.டி.ஏ கூட்டணி கருத்தாக பிரதிபலிக்கிறோம். இதில் முரண்பாடு என்ற வார்த்தைக்கு இடமில்லை. 2024ல் இருந்த கூட்டணியை இப்போது வலுப்படுத்தியிருக்கிறார். எங்களது ஒரே நோக்கம் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான்.

நாங்கள் தேஜகூவில் இருக்கிறோமா? என எங்களுக்கு பிறகு இணைந்த சிலர் கேட்கின்றனர், அது அவர்களின் அறியாமை” என்று கூறியுள்ளார். AMMK not in nda alliance

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share