டிஜிட்டல் திண்ணை: அட்டர் ஃப்ளாப் ஆன அமித்ஷாவின் ‘ஆபரேஷன் விஜய்’.. அதிர்ச்சியில் அதிமுக- அறிவாலயம் ஹேப்பி!

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், ‘யானைக்கும் அடி சறுக்கும்தான்’ என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

என்னப்பா பழமொழி எல்லாம் தினுசா இருக்கே?

ADVERTISEMENT

சொல்றேன்யா.. தவெக சிறப்பு பொதுக் குழுவில் கூட்டணி பற்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் அரசியல் வட்டாரங்களில் ‘திகுதிகு’ன்னு எரிந்து கொண்டிருக்கிறது..

ஓஹோ.. ரியாக்சன்ஸா? வரிசையாக சொல்லுமய்யா

ADVERTISEMENT

தவெகவின் பொதுக்குழுவில், “தமிழகம் முழுவதும் கோடானு கோடி மக்களின் பேராதரவைப் பெற்று, முதன்மைச் சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் நம் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில், 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது என்றும், தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தைக் கழகத் தலைவர் அவர்களுக்கே வழங்கி, இச்சிறப்புப் பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது” என கூட்டணி பற்றி தீர்மானம் நிறைவேறியிருந்தது..

தவெகவின் இந்த தீர்மானம் பற்றிதான் திமுக, அதிமுக வட்டாரங்களில் அனலடிக்கும் விவாதம் நடக்குது..

ADVERTISEMENT

அமைச்சர்கள் வட்டாரங்களிடம் நாம் பேசிய போது, “திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக தலைவர்கள் எல்லாமே, பாஜக கூட்டணிக்குள்ள்ள எப்படியும் விஜய்யை இழுத்துடுவாங்க.. அதிமுக+பாஜக+ பாஜக+ அன்புமணி பாமகன்னு கூட்டணி அமைந்தா தேர்தல் களம் ரொம்பவே கடுமையாக த்தான் இருக்கும்.. தேர்தலுக்கு செலவு செய்யனுமான்னு கூட நினைக்க வைக்கும்.. Income Tax, போதை மருந்துன்னு ஏதாவது பிரச்சனைகளை கிளப்பிவிட்டு விஜய்யை அமித்ஷா எப்படியும் கூட்டணிக்குள்ள கொண்டு வந்துடுவாருன்னுதான் ரொம்பவே யோசனையுடன் இருந்தாங்க..” என்றனர்

அதேபோல அரசியலை ரொம்பவே கூர்மையாக கவனிக்கிறவங்க கூட, ” அதெப்படிங்க விஜய், பாஜக கூட்டணிக்கு போவாரு? அவரு முதல்வர் வேட்பாளர்னு சொல்றாரு.. அதிமுக+ பாஜக கூட்டணிக்கு போனா அவரோட எதிர்காலம் சிக்கலாகிடுமே.. அதனால பாஜக கூட்டணிக்கு போகமாட்டாருன்னு” கூட சொன்னாங்க..

ஆனாலும் கூட, “அமித்ஷா அதெல்லாம் விடமாட்டாரு.. எப்படியும் கூட்டணிக்குள்ள விஜய்யை கொண்டு வந்துடுவாரு பாருங்கன்னு” சொல்லிகிட்டிருந்தாங்க சீனியர் திமுக ‘தலை’கள்..” என்றனர்.

இப்ப தவெக பொதுக்குழு தீர்மானத்துல, விஜய்தான் முதல்வர் வேட்பாளர்.. விஜய் தலைமையில்தான் கூட்டணின்னு சொல்லிவிட்டதால திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தெள்ள ‘தெளிவாகி’ட்டாங்க” என்கின்றனர்

ஓஹோ.. அதிமுக பக்கம் என்ன ரியாக்சனாம்?

தவெக பொதுக்குழு நடந்த நேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி நடத்தி இருந்தார்.. விஜய்தான் முதல்வர் வேட்பாளர்னு தவெக பொதுக்குழு தீர்மானம் டிவியில பிரேக்கிங் நியூஸாக ஓடுவதைப் பார்த்துவிட்டு அத்தனை மா.செ.க்களும் செம்ம அப்செட்டாம்..

இந்த கூட்டத்தில கலந்து கொண்ட அதிமுக மா.செ,க்கள் சிலரிடம் நாம் பேசினோம். அப்போது, “மா.செ.க்கள் முகம் எல்லாம் ரொம்பவே டல்லா இருந்ததை பொதுச்செயலாளர் உன்னிப்பாக கவனிச்சாரு..
அதனால, நல்ல கூட்டணி நிச்சயம் வரும்.. நாமதான் ஜெயிப்போம்.. நம்பிக்கையோடு தேர்தல் வேலையைப் பாருங்க” என உற்சாகமாகவே சொன்னாரு பொதுச்செயலாளர் (இபிஎஸ்)” என்றனர்.

அத்துடன், “கூட்டணி பற்றியோ செங்கோட்டையன் பற்றியோ வெளியில பிரஸ்ல யாரும் பேச வேண்டாம்”னும் மா.செ.க்கள் மற்றும் சீனியர்களுக்கு அன்பு கட்டளையும் போட்டாராம் இபிஎஸ்.

இருந்தாலும், “எத்தனையோ மாநிலங்களில் எப்படிப்பட்ட கட்சிகளை எல்லாம் கூட்டணிக்குள்ள கொண்டு வந்து சேர்த்தவரு அமித்ஷா.. விஜய்யை அவரால கூட்டணிக்குள்ள கொண்டு வரமுடியலைங்கிற போது.. தேர்தலில் என்ன வேலை செய்யுறது? என்ன செலவு செய்யுறது? என்கிற குழப்பம்தான் எங்களில் பலருக்கும் இருக்கு” என்கின்றனர் அதிமுக மா.செ.க்கள்.

இப்ப விஜய் தலைமையில் கூட்டணி உருவாகுது அப்படித்தானே?

அப்படித்தான் போல.. தவெக பொதுக்குழுவுல பேசுன விஜய், திமுக vs தவெக இடையேதான் நேரடிப் போட்டின்னு பஞ்ச் டயலாக் அடிச்சிருந்தாரு.. ” 2026 சட்டமன்றத் தேர்தலில் ரெண்டே ரென்டு பேருக்கு இடையேதான் போட்டி.. ஒன்று TVK… இன்னொன்று DMK 100% வெற்றி நிச்சயம்.. வாகை சூடுவோம். வரலாறு படைப்போம். நல்லதே நடக்கும்” என சபதம் போட்டிருந்தாரு விஜய்.

அதையேதான் டிடிவி தினகரனும் இன்னைக்கு பிரஸ் மீட்ல சொல்லி இருக்கிறாரு.. இன்றைக்கு நடந்த பிரஸ் மீட்ல பேசுன டிடிவி தினகரன், “சட்டமன்ற தேர்தலில் திமுக – தவெக இடையேதான் போட்டி. வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3ஆவது இடத்திற்கு செல்லும்.விஜய் தலைமையில் கூட்டணி வலுவாக இருந்தால் கடுமையான போட்டி இருக்கும் “னு சொல்லி இருக்கிறார் டிடிவி தினகரன்.

பாஜக மாஜி தலைவர் அண்ணாமலையும் கூட, தேர்தல் களத்துல திமுக- விஜய்யின் தவெக இடையேதான் கடும் போட்டி.. அதிமுகவுக்கு 3-வது இடம்தான் என இப்பவும் சொல்லிகிட்டு இருக்கிறாரு..

ஆக.. 2026 தேர்தலில் எத்தனை முனை போட்டின்னு சொல்றீரு?

தற்போதைய நிலையில், திமுக- அதிமுக- தவெக- நாதக என 4 முனைப் போட்டி உறுதியாகி இருக்குய்யா..

இதுல தவெக முதல் முறையாக களத்தை சந்திக்குது..

விஜய்யின் தவெக எந்த கூட்டணியோட வாக்குகளை சிதறடிக்கப் போகுது?

திமுக கூட்டணியின் வாக்குகளை இழுக்குமா?

அதிமுக ஓட்டுகளை அள்ளுமா?

சீமான் வாங்கி வைத்திருக்கும் வாக்கு வங்கியை சிதைக்குமா? என்பதுதான் பரபரப்பான விவாதம்..

இப்படி ஒவ்வொரு கூட்டணி ஓட்டுகளையும் தவெக விஜய் கணிசமாக பிரிச்சாருன்னா 2026 தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவின் போது தமிழக அரசியல் களம் அதிரி புதிரியாகத்தான் இருக்கும் என்று ஆரூடம் கணித்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share