வைஃபை ஆன் செய்ததும், “எலக்ஷன்தான் எத்தனை பாடுபடுத்துதுய்யா”என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா புது விசேஷம்?
திமுக- காங்கிரஸ் கூட்டணி இப்ப ஸ்டிராங் ஆகிடுச்சு… காங்கிரஸும் 28 சீட் வாங்கிடுச்சு.. தேமுதிகவையும் கூட்டணிக்குள்ள கொண்டு வந்துருச்சு திமுக.. ஒட்டுமொத்தமா திமுக கூட்டணி பலமாக இருப்பதுதான் எதிர்முகாமில அமித்ஷா, எடப்பாடியை ரொம்பவே பதற வைச்சுருக்குதாம்..
அதுக்கு ஏதாவது ஸ்கெட்ச் போட்டிருப்பாங்களே?
ஆமாய்யா.. திமுக கூட்டணிக்கு கவுண்ட்டர் கொடுக்கிற மாதிரி அதிமுக- பாஜக கூட்டணியையும் பலமாக்கனும்னு அமித்ஷா, எடப்பாடி தரப்புல தீவிரமா இருக்காங்களாம்..
அதனால விஜய்யை கூட்டணிக்குள்ள கொண்டு வர்றதுக்கு மறுபடியும் முயற்சி செஞ்சுகிட்டு இருக்காங்களாம்..
விஜய் தரப்புல அவரோட நண்பர் விஷ்ணு ரெட்டியும் 3 பேர் கொண்ட டீமும் அண்மையில டெல்லியில அமித்ஷாவை சந்திச்சு பேசியிருந்ததாம்.. அந்த டீம்கிட்டதான் இப்பவும் அமித்ஷா, எடப்பாடி தரப்பு பேசிகிட்டு இருக்காங்களாம்.. விஜய் தவெகவுக்கு கணிசமான சீட் தர்றோம்னு சொல்லி இருக்காங்களாம்..
விஜய் சைடுல என்ன பதில் வந்துச்சாம்?
விஜய் ஏற்கனவே மனைவி சங்கீதா விவகாரத்துல செம்ம அப்செட்..
இன்னொரு பக்கம் எப்பவும் போல விஜய் வீட்டுக்கு திரிஷா வர்றதும் அவங்க வீட்டுக்கு விஜய் போறதும் ரெகுலராகிடுச்சு..
இதுக்கு நடுவே, ”சங்கீதா கோர்ட்டு, கேஸ்னு போயிட்டாங்கதானே.. இனி எதுக்கு ஒளிவு மறைவு?”ன்னு சொல்லி, ஒரே காருல, ஒரே கலரு டிரஸ்ல சினிமா தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் வீட்டு கல்யாணத்துக்கு ’ஜோடியா’ போலாம்னு திரிஷாதான் விஜய்யை கூட்டிட்டு வந்தாங்களாம்..
இந்த களேபரத்துக்கு நடுவுல இன்னைக்கு விஜய் கலந்துகிட்ட மகளிர் தின விழாவை பத்தியும் ஏகப்பட்ட விமர்சனங்கள்.. இயக்குநர் அமீர் கூட ஒரு வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைக்க அது சோசியல் மீடியாவுல வைரலாகிடுச்சு..
இப்படி திரும்புன பக்கமெல்லாம் ‘பஞ்சாயத்தா’ன்னு ஒரே டென்ஷன்லதான் விஜய் இருக்கிறாராம்..
இந்த நிலைமையிலதான் அமித்ஷா, எடப்பாடி சைடுல இருந்தும் மூவ் நடக்குது.. இதை பத்தி வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி தரப்புல விசாரிச்சப்ப, “இல்லை.. இல்லை.. அப்படி எல்லாம் எந்த முடிவும் விஜய் எடுக்கலை.. அப்படி செஞ்சா அவரோட ப்யூச்சரே அவ்வளவுதான் முடிஞ்சிரும்.. இந்த எலக்ஷன்ல தனித்துதான் போட்டியிடனும்னு உறுதியா இருக்கிறாரு விஜய்” என சொல்றாங்கய்யா என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
