கேஸ் தட்டுப்பாடு: அனைத்து ஹோட்டல்களுக்கும் மின் கட்டண சலுகை- தமிழக அரசு அதிரடி!

Published On:

| By Mathi

TN Govt EB

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து ஹோட்டல்களுக்குமான மின்சார கட்டணத்தில் தமிழ்நாடு அரசு அதிரடியாக சலுகையை அறிவித்துள்ளது.

சென்னையில் இன்று மார்ச் 14-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சார வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன், சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் மின்சார அடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் அனைத்து வகை உணவகங்களுக்கும் மின் கட்டணத்தில் ஒரு யூனிட்டுக்கு ரூ.2 சலுகை வழங்கப்படும் என அறிவித்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share