லோகஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு உருவாகியுள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. am i wasted sanjay dutt in leo? – lokesh kanagaraj
இதற்கிடையே லியோ படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் பங்கேற்ற பட விளம்பர நிகழ்ச்சியில் விஜய் மற்றும் லோகேஷ் குறித்து பேசியிருந்தார். அவர், ” “நான் தளபதி விஜய்யுடன் பணிபுரிந்தேன். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. ஆனால் லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக இருக்கிறேன். ஏனென்றால் அவர் லியோவில் எனக்கு பெரிய கதாப்பாத்திரம் கொடுக்கவில்லை. அவர் என்னை வீணடித்துவிட்டார் என சிரித்தபடியே பேசியிருந்தார்.
தமிழ் திரையுலகில் மிகப்பெரிய வெற்றிபடங்களில் ஒன்றான லியோ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தும், சஞ்சய் தத்தின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஹாலிவுட் ரிப்போர்டர் இந்தியா யூடியூப் சேனலில் தொகுப்பாளர் அனுபமா சோபராவிற்கு அளித்த நேர்காணலில் சஞ்சய் தத் தன்னை குறித்து பேசியதற்கு பதிலளித்திருந்தார்.
அவர், “அந்த சம்பவத்திற்குப் பிறகு சஞ்சய் சார் எனக்கு போன் பண்ணினார். ‘நான் வேடிக்கையாகதான் அந்த கருத்தைச் சொன்னேன். ஆனால் அதை சமூக ஊடகங்களில் என் பேச்சை கட் செய்து பதிவிட்டு பெரிதாக்கிவிட்டார்கள். எனக்கு அது சங்கடமாக இருக்கிறது’ என சஞ்சய் சார் என்னிடம் கூறினார். நான், ‘பிரச்சினை இல்லை சார்’ என்று சொன்னேன்.
நான் திரையுலகில் ஒரு மேதையோ அல்லது சிறந்த இயக்குநரோ அல்ல. நான் என் படங்களில் பல தவறுகளைச் செய்திருக்கிறேன், அதன் மூலம் கற்றுக்கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக நான் சஞ்சய் தத் சாருடன் இன்னொரு சிறந்த படம் பண்ணுவேன்” என்று லோகேஷ் தெரிவித்தார்.