இயற்கையாக கிடைக்கும் கற்றாழைச் செடியில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ள நிலையில், அதனை எப்படி சருமத்திற்கு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
கற்றாழைச் செடிகள் இப்போது பெரும்பாலும் வீட்டிலேயே வளர்க்கப்பட்டு வருகின்றன. உங்கள் உடலில் ஏற்படும் சூட்டை தணிக்க அல்லது சமையலறையில் ஏற்பட்ட தீக்காயங்களை குணமாக நீங்கள் ஏற்கனவே கற்றாழையைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் உங்கள் சருமப் பாதுகாப்புக்கு கற்றாழை பயன்படுத்துவது சரியா மற்றும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
கற்றாழை முக சருமத்திற்கு ஒரு சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது. உண்மையில், முகத்திற்காக தயாரிக்கப்படும் பல தோல் பராமரிப்புப் பொருட்களில் கற்றாழை சேர்க்கப்பட்டுள்ளது. கற்றாழை சருமத்திற்கு ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது. முகத்தை ஈரப்பதமாக வைத்திருப்பது, வீக்கத்தைக் குறைப்பது, முகப்பருவைக் குறைத்தல் மற்றும் சரும எரிச்சல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.
கற்றாழை பொதுவாக எல்லா சருமத்திற்கும் பொருத்தமானதாக அமையும். ஆனால் ஒவ்வாமை சருமம் கொண்டவர்களுக்கு இது ஏற்புடையதா என்பதை ஒரு முறை ஒரு பேட்ச் டெஸ்ட் செய்வதே நல்லது. கற்றாழை ஜெல்லை உங்கள் மணிக்கட்டு அல்லது முழங்கையின் உட்புறம் போன்ற உங்கள் தோலின் ஒரு சிறிய பகுதியில் தடவி, உங்கள் முகத்தில் தடவுவதற்கு முன் ஏதேனும் பாதகமான எதிர்வினை இருக்கிறதா என்று பார்க்க 24 மணி நேரம் காத்திருக்கவும். இதுவும் ஆகாமல் சருமம் ஒரே மாதிரியாக இருந்தால் நீங்கள் பயன்படுத்தலாம்
சருமத்திற்கு கற்றாழை தடவுவதால் ஏற்படும் நன்மைகள்
- சருமத்தில் ஏற்படும் தடிப்புகள், எரிச்சல் மற்றும் வீக்கத்தை குறைக்கிறது
- வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ நிறைந்துள்ளது எனவே இதை
சாப்பிடவும் பயன்படுத்தலாம் - அழற்சி எதிர்ப்பு குணங்கள் உள்ளன.
- முக சருமத்தை எண்ணெய் பசை இல்லாமல் ஈரப்பதமாக்கி பளபளக்க செய்கிறது
- தோல் சுருக்கம் ஆகாமல் தோலை இறுக வைக்கிறது
- கற்றாழையின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருவை குணப்படுத்துகின்றன.
- துளைகளை இறுக்கமாக்கி, மென்மையான சருமத்தை உருவாக்க முடியும்.
- வெட்டுக்கள், தீக்காயங்கள் உள்பட காயம் குணமடைவதை ஊக்குவிக்கிறது
சருமத்தில் கற்றாழையை மூன்று வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். தாவரத்திலிருந்து நேரடியாகப் பயன்படுத்தலாம், ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து பயன்படுத்தலாம், முன்பே தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருளின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தலாம்.செடியிலிருந்து நேரடியாகப் பறித்த கற்றாழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள். தண்டின் நுனியிலிருந்து ஒரு சிறிய துண்டை வெட்டி, பின்னர் செடியிலிருந்து நேரடியாக கூழ் பிழிந்து தேவைக்கேற்ப தடவலாம்.
கற்றாழையை யார் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்?
பெரும்பாலான பொருட்களை போலவே, கற்றாழைக்கும் சில குறைபாடுகள் உள்ளன. இரைப்பை குடல் அல்லது சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்கள் பாதகமான விளைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் காரணமாக கற்றாழையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் கற்றாழையை உபயோகப்படுத்துவதற்கு ஒரு முறை பேட்ச் டெஸ்ட் செய்வது அல்லது ஒரு தோல் மருத்துவரை அணுகுவது நல்லது.
