அரசு பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூக நீதி விடுதிகள்’- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

Published On:

| By Mathi

Social Justice Hostel

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரி விடுதிகள் அனைத்தும் இனி ‘சமூக நீதி விடுதிகள்’ என அழைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். Social Justice Hostels

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “பேதங்களைத் தகர்த்தெறிந்து சமத்துவத்தையும் – சமூகநீதியையும் காக்க புரட்சியால் புதுமையைப் படைப்பதே திராவிட வரலாறு!

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share