டெல்லி புறப்பட்ட விஜய் : ஆதவ் அர்ஜூனாவிடம் மதுபாட்டில் பறிமுதல்?

Published On:

| By Kavi

சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

2025 செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்துக்கு சென்ற போது, கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

ADVERTISEMENT

உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்தநிலையில் மூன்றாவது முறையாக நாளை (மார்ச் 15) நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.

ADVERTISEMENT

அதன்பேரில் விஜய் இன்று தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதற்காக நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து கார் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்த விஜய்யிடம் பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கமான சோதனையை மேற்கொண்டனர்.

அப்போது விஜய் பையில் கத்தரிகோல் இருந்ததாக தகவல்கள் வருகின்றன. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் பின்னர் அனுப்பி வைத்தனர். அதுபோன்று தவெக மூத்த நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது போது, அவரிடமிருந்து உயர் ரக விஸ்கி இருந்தததாகவும், அது பறிமுதல் செய்ய்யப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.

ADVERTISEMENT

இந்த சோதனையின் காரணமாக விமானம் தாமதமாக புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்தசூழ்லைல் ஆதவ் அர்ஜூனா தொடர்பாக வரும் செய்தி முற்றிலும் தவறானது என்று தவெக தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தனது எக்ஸ் பக்கத்தில், “இது முற்றிலும் பொய்யான தகவல். இது போன்ற ஒரு சம்பவம் நடைபெறவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share