மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 19 காளைகளை அடக்கிய கார்த்தி என்ற வீரர் முதலிடம் பெற்றார். ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
அலங்காநல்லூரில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்த போட்டிகள் மாலை வரை நடைபெற்றன.

மொத்தம் 1,100 காளைகள் பங்கேற்ற இப்போட்டியில் 600 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் கருப்பாயூரணி கார்த்தி என்ற மாடுபிடி வீரர் மொத்தம் 19 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். அவருக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்பட்டது. 16 காளைகளை அடக்கி 2-வது இடம் பிடித்த சிவகங்கை பூவந்தி அபி சித்தருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. 3-வது பரிசு, 11 காளைகளை அடக்கிய மதுரை பாசிங்காபுரம் ஸ்ரீதருக்கு கிடைத்தது.

பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது, வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர்களுக்கு தங்க மோதிரம், தங்கக் காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின்.
படங்கள்:


