நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் ‘அகண்டா-2’ திரைப்படம் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ்சினிமாவில் எத்தனை வயதானாலும் ரஜினி, கமலின் ஹீரோயிசத்தை கொண்டாடுவதை மக்கள் தவிர்க்கவில்லை. அதேபோன்று தெலுங்கு திரையுலகிலும் அப்படி கொண்டாடப்படும் வயதான நடிகராக கருதப்படுகிறார் நந்தமூரி பாலகிருஷ்ணா.
பாலையா என ரசிகர்களால் கொண்டாடப்படும் இவரின் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் அகண்டா படம் வெளியாகி அந்த ஆண்டின் தெலுங்கு படங்களில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.
இதனையடுத்து இந்தப் படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இப்படம் கடந்த மாதம் 26ஆம் தேதி பவன் கல்யாணின் ‘தே கால் ஹிம் ஓஜி’ படத்துடன் வெளியாக இருந்த நிலையில் ஆனால், அதன் வெளியீடு திடீரென்று தள்ளிவைக்கப்பட்டது. விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைவுறாததே அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது
இந்நிலையில் ‘அகண்டா 2’ படம் வரும் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
ஏற்கெனவே வரும் டிசம்பர் 5ஆம் தேதி பிரபாஸ், நித்தி அகர்வால், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ராஜா தி சாப் திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் பான் இந்திய படமாக பிரபாஸ் மற்றும் பாலையாவின் படங்கள் வெளியாக உள்ள நிலையில், சொன்னபடி அகண்டா 2 சவால் கொடுக்குமா? அல்லது அப்போதும் பின்வாங்குமா என ரசிகர்கள் கேள்வி எழுபி வருகின்றனர்.